×

ஆண்கள் ஆரோக்கியமா அழகா இருக்க ஆறு வழிகள்

 

ஆண்கள் ஆரோக்கியமாக இருக்க தினமும் நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல்,கார்டியோ போன்ற பயிற்சிகள் குறைந்தது 30 நிமிடம் செய்யுங்கள் இதனால் உங்களுடைய மன அழுத்தம் குறைய தொடங்கும். இந்த பயிற்சியால் உங்கள் உடலில் இருக்கும்  கலோரிகள் எரிக்கப்பட்டு இதயம் மற்றும் அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியம் பெறும் .இதனால்  எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் நீண்ட நாட்கள் வாழ முடியும்.

ஆண்களின் அழகு அவர்கள் எப்படி தங்களுடைய உடலை பராமரிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து மாறுபடும். ஆண்கள் எப்பொழுதும் அழகாக தெரிவதற்கு பின்வரும் ஆரோக்கிய குறிப்பை பின் பற்றுங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள்

ஆண்களுக்கென பிரத்யேகமாக உள்ள உடற்பயிற்சி அல்லது விளையாட்டுகள் தேவை .

இதன் மூலம் உடலில் தேவையில்லாமல் கொழுப்புக்கள் சேர்வது இதனால் தவிர்க்கப்படும் மேலும் முகம் மற்றும் வயிற்று  பகுதிகளில் கொழுப்புகள் சேராமல் இருந்தால் ஆண்களின் தோற்றம் எப்போதும் அழகாக இளமையாக தெரியும்.

ஆண்களுக்கென பிரத்யேகமாக உள்ளசன்ஸ்க்கிரீன் மற்றும் மாய்ஸ்சரைசர் கிரீம்  பயன்படுத்துங்கள்.

இதன் மூலம்  ஆண்களுக்கும் இந்த கிரீம்களை பல்வேறு முன்னணி நிறுவனங்கள் விற்பனை செய்கிறது இதன் மூலம் ஆண்களின் ஆரோக்கியத்துக்கு நல்ல பலன் கிடைக்கிறது 

உடனடியாக நிறுத்த வேண்டும்

 உங்களுடைய தோற்றம் வயதானவர் போல் தெரியாமலிருக்க   புகை பிடிப்பதை  நிறுத்த வேண்டும்.இதன் மூலம் உங்கள் நுரையீரல் இதயம் பாதுகாக்க படுகிறது

ஆரோக்கியமான உணவு.

ஆரோக்கியமான இயற்கையான உணவை எடுத்துக் கொள்வதால் மட்டுமே 80 சதவிகித அளவிற்கு உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு நீண்ட நாள் நோயின்றி வாழ முடியும்

சரியான தூக்கம்.

இரவில் நீண்ட நேரம் கணினி மற்றும் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள் இதனால் கண்களுக்கு கீழ் தோன்றும் கருவளையம்தோன்றி முக அழகு கெடாமல் இருக்கும்

மேலும் ஒருவருக்கு சரியான அளவில் தண்ணீர் தேவை.ஒருவருடைய உடலில் அதிகப்படியான நஞ்சுகள் இருந்தாள்  ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர்  தண்ணீர் குடித்து வந்தால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி ஆரோக்கியம் மேம்படும்