×

வாயு தொல்லை நீங்க எதையெல்லாம் ஒதுக்கி வாயை கட்டணும் தெரியுமா ?

 

வாய்வு தொல்லை என்பது அனைத்து மனிதர்களுக்கும் இருக்கக்கூடிய ஒன்று தான். சில நேரங்களில் இது சிலருக்கு தர்ம சங்கடமான சூழலை கூட உருவாகிவிடும். நாம் வெளியேற்றும் வாய்வில் நாற்றம் இல்லாதவரை நமது உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நாற்றம் இருந்தால் நாம் நிச்சயம் அதை சரி செய்யவேண்டியது அவசியமாகிறது. நமது உடலில் இருந்து ஆசன வாய் வழியாக ஒருநாளைக்கு 15 முறை வாய்வை வெளியேற்றலாம். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பால் சம்மந்தமான உணவுகள், முட்டை கோஸ், பட்டாணி, வெங்காயம், காலிஃபிளவர் போன்ற சில பொருட்களை அதிகம் உண்பதால் வாய்வு தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது.

நம் உடம்பில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்கள் தான் நமக்கு நோய்கள் அல்லது உடல் உபாதைகள் தோன்றுவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.

அந்த வகையில் மக்கள் அதிகமாக சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று வாயுதொல்லை இதற்கு முக்கிய காரணம் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் மட்டுமே.

 

வாயு தொல்லை ஒரு பெரிய பிரச்சினை இல்லை என்றாலும் இதனால் கஷ்டப்படுபவர்கள் ஏராளம் என்று தான் சொல்ல வேண்டும்.

நாம் இந்த பதிவில் வாயு தொல்லை என்றால் என்ன? மாதிரியான அறிகுறிகள் வெளிப்படும் என்பதை படித்து தெரிந்து கொள்ளலாம்.

வாயு தொல்லை வர முக்கிய காரணம்

அதிகம் எண்ணெய் உள்ள உணவுகள், சர்க்கரை அதிகம் உள்ள உணவு, துரித உணவு, பால் அதிகமாக குடிப்பது, போன்றவை வாயு  தொல்லை வர முக்கிய காரணமாக இருக்கலாம்.

கோதுமை கலந்த உணவு சாப்பிடும்போது உடலில் அதிக அளவு வாய்வு தொல்லை ஏற்படுகிறது.

 

நேரம் தவறி சாப்பிடுவதால் வாயுத்தொல்லை ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

வாயு தொல்லை அறிகுறிகள் என்ன

சாப்பிட்டு முடிந்ததும் ஏப்பம் வருவது வாயுத் தொல்லை இருப்பதற்கான முதல் அறிகுறியாக இருக்கிறது.

சிறிதளவு சாப்பிட்டால் கூட தொடர்ந்து ஏப்பம் வருவது மற்றும் ஆசனவாய் வழியாக வாயு வெளியேறுவது, சாப்பிட்டு முடிந்ததும் வயிறு வீங்கி இருப்பது, போன்றவை உடம்பில் வாயு இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.

ஒரு சில நபர்களுக்கு காலையில் சாப்பிட்டால் மாலை வரை மறுபடி பசி எடுக்காது,இதுபோன்று பசி எடுக்காமல் இருப்பதற்கு வாய்வுத்தொல்லை முக்கிய காரணமாக இருக்கிறது.

வயிறு மந்த நிலையில் இருப்பது, மூச்சு பிடிப்பது, வயிற்றுப்போக்கு, அல்லது மலச்சிக்கல், வயிற்றுப் பிடிப்பு,போன்ற காரணிகள் வாயு தொல்லை அறிகுறிகள் ஆகும்.

உணவு சாப்பிட்ட பிறகு வயிறு உப்புசமாக இருப்பது, குதிகால் வலி, இடுப்பு பிடிப்பு, திடீரென்று தலை சுற்றுவது, போன்றவை வாய்வு தொல்லை இருப்பதற்கான சில அறிகுறிகள்.

வாயு தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்

இந்த வாயு தொல்லை நீங்குவதற்கு சாப்பிடுவதற்கு முன்னர் மற்றும் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் தண்ணீர் குடிக்க கூடாது, இது உங்களுடைய ஜீரண மண்டலத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

உணவை வேகமாக சாப்பிடாமல் நன்கு மென்று பொறுமையா சாப்பிட வேண்டும் மற்றும் எண்ணெய் சார்ந்த உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது.

 

குறிப்பாக கீரை சார்ந்த உணவுகளை சாப்பிடும் போது தயிர் மற்றும் பால் எடுத்துக்கொள்ளக்கூடாது, பழங்கள் சாப்பிடும் போது பால், தயிர், காய்கறிகள், சாப்பிட கூடாது.

துரித உணவுகளை இரவு நேரத்தில் அதிகமாக சாப்பிடக்கூடாது, வறுத்த கோழிக்கறி உணவுகளை சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்திவிடுங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

உணவில் அதிக அளவு நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள், அசைவம் சாப்பிடும் போது காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது.

வாயு தொல்லை அதிகம் உள்ள நபர்கள் புதினா டீ, சோம்பு, சீரகம், போன்ற ஜீரண சக்தியை மேம்படுத்த கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

வேக வைத்த முட்டை, கொண்டைக்கடலை, பாசிப்பயிறு, போன்ற உணவுகள் சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்தி விடுங்கள்.