×

வாயு பிரச்சினை தீர  என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?

 

பொதுவாக உடலில் ஏற்படும் வாயு தொல்லையால் பல உடல் உபாதை உண்டாகும் 
வயிற்றில் வாயு உருவாவதற்காக காரணம் பற்றியும் அதை எப்படி தீர்ப்பது என்பது பற்றியும்  தெரிந்துக்கொள்வோம். 

1.சிலர் காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பர் .இப்படி குடித்தால் வாயு பிரச்சினைகள் ஏற்படும்.
2.சிலர் அடிக்கடி உணவை விரைவாக சாப்பிட முயற்சிப்பர் .இப்படி முயற்சிப்பதால் செரிமான பிரச்சினைகள் ஏற்பட்டு, அது வாயுப்பிரச்சினையாக மாறுகின்றது.  
3.சிலர் லாக்டோஸ் கொண்ட பால் அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிடுவர் .இப்படி சாப்பிட்டால் வாயு தொல்லை ஏற்படும்.
4.சிலர் வாயை அதிகமாக திறந்து உணவை சாப்பிடுவர் ,இப்படி உட்கொண்டால் வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். 
5.சிலருக்கு உணவை ஜீரணிக்க முடியாது .இப்படி ஜீரணம் இல்லை என்றாலும் இந்த பிரச்சினை ஏற்படுக்கூடும்.
இது வருவதை எப்படி தடுக்கலாம் என்று பார்ப்போம்.  
6. வாயு பிரச்சினை தீர பெருஞ்சீரகத்தை தண்ணீரில் இட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் வடிக்கட்டி தினமும் குடிக்க வேண்டும்.
7. வாயு பிரச்சினை தீர அதிக எண்ணெய் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
8. வாயு பிரச்சினை தீர புதினா நீரை குடித்து அதன் இலைகளை சாப்பிடுவது கோடை காலத்தில் நன்மையளிக்கும்.
9. வாயு பிரச்சினை தீர ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதனுடன் இஞ்சி சேர்த்து அதை குடித்து வந்தால் நல்லது.
10.. வாயு பிரச்சினை தீர நடைபயிற்சி மேற்கொண்டால் வயிற்றில் இருந்து வாயு வெளியேறும்.