×

முதுமைக் காலத்தில் ஏற்படும் கண் புரை, விழித்திரை சிதைவு வராமல் காக்கும்  இந்த பழம்

 

மிக அழகாக பச்சை பசேலென்று காட்சி தரும் பழம்தான் கிவி பழம் .இந்த பழம் நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொடுக்கிறது .இந்த பழத்தில்  டெங்கு நோய் எதிர்ப்பு குணம் அடங்கியுள்ளது .குளிர்காலத்தில் வரும் காய்ச்சல் போன்ற நோய்களை இந்த கிவி பழம் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது மேலும் இந்த கிவியின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த ப்பதிவில் பார்க்கலாம் 

 
1.நமக்கு ஆரோக்கியம் தரும் கிவி கனியில் கொழுப்புச் சத்து குறைவான அளவில் இருக்கிறது. 
2.கிவி கனியின் குறைந்த கொழுப்பால்  உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதனை உண்ணலாம்.
3.அத்துடன் இதில் விட்டமின் சி கூடுதலாக இருக்கிறது. அதனால் இம்மியூனிட்டி பவரை வழங்குகிறது, 4.அத்துடன் நம்  உடலில் கட்டுப்பாடின்றித் திரியும் ரேடிக்கிள் தான் செல்களின் சிதைவிற்கும் காரணமாக இருக்கின்றன. 
5.கிவி இத்தகைய ரேடிக்களின் வன்செயலை அழித்து செல்கள் சிதைவதை தடுத்து நம் ஆரோக்கியம் காக்கும் 
6.கிவி பழம் அதிகம் உண்டு வந்தால்  முதுமைக் காலத்தில் ஏற்படும் கண் புரை, விழித்திரை சிதைவு ஆகியவற்றை ஏற்படாமல் காக்கிறது.
7.இந்த கிவி பழத்தில் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தேவைப்படும் ஃபோலேவி என்ற சத்தும் இதில் உள்ளது.
8.இந்த கிவி பழத்தில் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமில சத்தும் இதில் அதிகமுள்ளது. 
9.அதனால் வளரும் நிலையில் உள்ள குழந்தைகளுக்கு சாப்பிடுவதற்கு ஏற்ற கனியாக இந்த கிவி பழம் உள்ளது 
10.. கிவி கனியில் ஏராளமாக பொட்டாசியம் சத்து உள்ளதால் இதய துடிப்பை சீரான நிலையில் வைத்துக்கொள்ள இந்த பழம் உதவி புரிகிறது