×

இயர் போன் பயன்படுத்துவோரை படுத்தி எடுக்க இருக்கும் நோய்கள்

 

 இயர்போனுக்கு அடிமையாகி இருப்பவர்களின் காது, அதன் இயல்பான உணர்வுத்தன்மை குறைந்து, மரத்துப்போகும் நிலைக்கு தள்ளப்படும். நாளடைவில் கேட்கும் தன்மையை இழந்து விடுகின்றனர். மேலும் நாளடைவில் பழைய நினைவுகளே இல்லாமல் செய்து விடும் என்கின்றனர் மருத்துவர்கள்

நீண்ட நாட்களாக இயர்போன் பயன்படுத்தி வந்தால் அதிக மன அழுத்தம் ,கோபம் ,நடத்தையில் மாற்றம் போன்ற சைக்கலாஜிக்கல் பிரச்சினை ஏற்படுமாம்

மனிதனுடைய காதின் 'இயர்டிரம்' உள்ளே, மிகவும் மென்மையான நரம்புகளை கொண்டுள்ளது. அள வுக்கு அதிகமாக இயர்போன் பயன்படுத்தும் போது, அதிக அழுத்தம் காரணமாக முதலில் காதின் வெளிப்புறத்தில் வலி ஏற்படும். தொடர்ந்து பயன்படுத்தும்போது, காதின் உட்புற பாகங்களிலும் அதிர்வும், இரைச்சலும், வலியும் ஏற்படும். இயர்போனை கழற்றாமல் தொடர்ந்து பயன்படுத்தினால், அதிக டெசிபல் சத்தம் உள்ளே சென்று அது காதுகளை கடுமையாக பாதித்து நாளடைவில் காது கேட்காமல் போக வாய்ப்பு அதிகம் என்று நரம்பு டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்

இயர்போனின் மின்காந்த அலைகளால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு மூளை கோளாறு ஏற்பட வாய்ப்புகள் உண்டு .மேலும் காதுகளுக்குள் சில செல்கள் இறந்து விடுவதால் அவை மீண்டும் உயிர்பெற வாய்ப்பு இல்லாததால் காதுகள் இயர் போனால் கடும் பாதிப்புக்குள்ளாவதால் காதுகளை நாம் பாதுகாக்க வேண்டும்