×

உலர் திராட்சை ஊற வச்ச தண்ணீரை குடிச்சா உடலில் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா?

 

கிஸ்மிஸ் என்று அழைக்கப்டும் உளர் திராட்சை நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து விடுகின்றன ,மேலும் கீல் வாதம் எனப்படும் பல மூட்டு நோய்களை வரவிடாமல் செய்து விடுகிறது .மேலும் இந்த திராட்சை புற்று நோய் செல்களை வளர்ச்சியடையாமல் நம்மை பாதுகாக்கிறது .இந்த திராட்ச்சையை அப்படியே சாப்பிடுவதை விட இரவில் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் சாப்பிட்டால் நல்ல பலமும் பலனும் கிடைக்கும் .தொடர்ந்து தினமும் உலர் திராட்சை ஊறவைத்த நீரை குடிப்பதால் அசிடிட்டி பிரச்சினை குறையும்.

உலர் திராட்சை ஊறவைத்த நீர்  வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்த்து ஆரோக்கியமாக வைத்திருக்கச் செய்கிறது.மேலும் எடை குறைப்பு ,தூக்கமின்மை பிரச்சினை வரை தீர்த்து நம் ஆரோக்கியத்தை காக்கும்

உலர் திராட்சை நீர் தயார் செய்வது எப்படி?

ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

 பினபு அடுப்பை அணைத்துவிட்டு சூடான நீரில் 20 உலர் திராட்சையை போட்டு மூடி வையுங்கள்.

 இரவு முழுக்க அப்படியே ஊறட்டும். அடுத்த நாள் காலையில் உலர் திராட்சை தண்ணீரில் நன்றாக ஊறியிருக்கும்.

அந்த நீரை அப்படியே குடித்துவிட்டு அடியில் இருக்கும் உலர் திராட்சையையும் எடுத்து சாப்பிடுங்கள்.