புதினா சாறுடன் , எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து சாப்பிட எது குறையும் தெரியுமா ?
பொதுவாக இப்போதெல்லாம் சிறு சிறு உடல் உபாதைகள் வந்தாலும் உடனே ஆங்கில வைத்தியரிடம் சென்று பணம் செலவு செய்து மருந்து மாத்திரை வாங்கி சாப்பிடுகின்றனர் .ஆனால் நம் வீட்டுல உள்ள கிச்சனில் பல நோய்களுக்கு மருந்து இருப்பதை மறந்து விடுகின்றனர் .இந்த ப்பதிவில் வீட்டு வைத்தியம் மூலம் எந்த நோய்களை குணமாக்கலாம் என்று பார்ப்போம்
1.சிலருக்கு பசி எடுக்கவே எடுக்காது ,அவர்கள் புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ள நல்லா பசியெடுக்கும் .
2.
சிலருக்கு நெஞ்சில் சளி கட்டி கொண்டு தொல்லை கொடுக்கும் .அவர்கள் தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
3.
சிலருக்கு தலை வலி வந்து பாடாய் படுத்தும் ,அவர்கள் ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
4.
சிலருக்கு வயிறு வலி இருக்கும் ,அவர்கள் வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
5.
சிலருக்கு அஜீரணத்தால் பேதியாகும் ,அவர்கள் மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.
6.
சிலருக்கு சீதபேதி இருந்துகொண்டு அவஸ்த்தை கொடுக்கும் ,அவர்கள் மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
7.
சிலருக்கு வண்டு கடித்து விடும் ,அவர்கள் வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.
8.
சிலருக்கு பித்தம் அதிகமாய் இருக்கும் .அவர்கள் 4 அல்லது 5 வெங்காயத்தை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர பித்தம் குறையும்.