×

ஒமிக்ரான் வைரஸ் தொற்றாமலிருக்க இதையெல்லாம் தட்டாமல் செய்யுங்க

 

தற்போது உலகமெங்கும் ஓமிக்ரான் வைரஸ் பரவல்  அதிகரித்து வருகிறது. இந்த புதிய நோய்த்தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள இயன்றவரை நடவடிக்கைகளை எடுத்து வருவது அவசியம். தடுப்பூசி போடவும், தவறாமல் உடற்பயிற்சி செய்வதன் மூலமும், ஆக்ஸினேற்றம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும் முயற்சி செய்ய வேண்டும்.

​நோயெதிர்ப்பு சக்தி

இயற்கையாகவே தங்களுடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும். தடுப்பூசி போட்டு வருவது உங்களுக்கு டி-செல் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்யும். அதே மாதிரி சத்தான உணவை சாப்பிடுவதும் உங்களுடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்யும். இதற்கிடையில் நீரிழிவு நோயாளிகள் மற்றும் இரத்த அழுத்தம் உடையவர்கள் என்றால் சில கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். ஏனெனில் நீரிழிவு நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது குறைவாக உள்ளது.


நீரிழிவு நோயாளிகள் தங்களுடைய இரத்த சர்க்கரை அளவை எப்பொழுதும் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். அவர்களின் உடம்பிற்கு ஏற்ற வகையில் இன்சுலின் மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட வேண்டும். அதே மாதிரி நீரிழிவு நோயாளிகள் தங்களுடைய எடையை சரியாக பராமரித்து வர வேண்டும்.

நீரிழிவு நோயாளிகள் Omicron தாக்கத்திலிருந்து எப்படி தங்களை காத்துக் கொள்ளலாம்

இவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்

நிபுணர்களின் கூற்றுப்படி, கோவிட் 19 தடுப்பூசி உங்கள் T-cell நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்கிறது. அதே நேரத்தில், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சரியான நேரத்தில் உட்கொள்வதன் மூலம் இயற்கையான முறையில் நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்

உடல் பருமன் ஒரு பிரச்சனையாக மாறும்

நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். எனவே அவர்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்துவது மற்றும் சர்க்கரை அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம். இதற்கு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இன்சுலின் எடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். நீரிழிவு நோயாளிகள் தங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது முக்கியம்.

உங்களுக்கு உடல் பருமன் பாதிப்பு இருந்தால், கோவிட் தொற்று ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே உடல் பருமனுடன் கூடிய நீரிழிவு பிரச்சனை உங்களுக்கு ஆபத்தானது.

உணவுகளில் கொட்டைகள், பழங்கள் மற்றும் சாலட்டுகள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த ஆன்டி ஆக்ஸிடன்கள் நோயெதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுவதை தடுக்கிறது.

நோய்களைத் தடுக்க பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 30 கிராம் அல்லது 1 அவுன்ஸ் நட்ஸ் வகைகள் பரிந்துரைக்கப்படுகிறது.

சமச்சீர் உணவு எந்த வித தொற்று மற்றும் நோய்களிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கும். Antioxidant நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம், நீங்கள் வைரஸ் ஏற்படாமல் தவிர்க்கலாம். நட்ஸ், பழங்கள் மற்றும் சாலட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். Antioxidant உங்கள் டிஎன்ஏவை எந்த புதிய வகை சேதத்திலிருந்தும் பாதுகாக்கின்றன. இவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க உதவும்.

தினமும் சுமார் 30 கிராம் அளவுக்கு பருப்பு வகை உணவை உட்கொள்வது தொற்று மற்றும் நோய்களில் இருந்து உங்களை காப்பாற்றும். இன்ஹேலர், இன்சுலின் எடுத்துக் கொண்டால், சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஏதேனும் அடிப்படை நிலைக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டால், உங்கள் மருத்துவரை தவறாமல் அணுகவும்.