×

நெஞ்சில் குடியிருக்கும் சளியை ,நஞ்சாக மாறாமல் விரட்டும் முரட்டு வழிகள் 

 

சாதாரண இருமலுடன் சளி வந்தால் சீக்கிரம் சரி ஆகி விடும். ஆனால் நெஞ்சு சளியின் அறிகுறிகள் உடனே தெரிவதில்லை.

மூச்சுக் குழாய் அழற்சி அல்லது கபவாதம் போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகபடியான இருமல் வரும் போது தான் நெஞ்சு சளி இருப்பதே தெரிய வரும்.

நெஞ்சு சளியின் நிறத்தை வைத்தே (பச்சை அல்லது மஞ்சள்) நெஞ்சு சளியின் ஆரம்பம் எந்த தொற்று நோய் என்பதை பெரும்பாலும் கணித்து விட முடியும். எனவே இவற்றை ஆரம்பத்திலே போக்குவது நல்லது.

நோய் வருவதற்கு முன்பே அதை வராமல் தடுத்து கொண்டவர்கள் நம் முன்னோர்கள். அப்படியே வந்தாலும் கை வைத்தியத்தில் அதை எளிதாக நீக்கி ஆரோக்கியமாக வாழ்ந்தவர்கள். கடுமையான நோய்களை கூட சிறந்த வைத்தியத்தின் மூலம் தீவிரமாகாமல் பார்த்து கொண்டார்கள் என்பதை அனைவரும் அறிவோம்.
சாதாரண வைரஸ் தொற்று உருவாக்கும் சளியை மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தி வருகிறோம். தற்காலிகமாக அவை சரியானாலும் அவை உடலுக்குள் நுரையீரலில் சுவாசப் பாதையில் இருக்கவே செய்கிறது. இவை தான் நெஞ்சுக்கூட்டில் தேங்கி மார்புச்சளியாக தங்கிவிடுகிறது. இவை அதிகமாகும் போது பல பிரச்சனைகளை சந்திக்கிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்கள் நெஞ்சு சளியால் அவதிப்படுகிறார்கள். 


​நெஞ்சு சளி

மூக்கில் சளி வரும்போதே அதை சிந்திவிடவேண்டும். சாதாரணமாக சளி பிடித்தால் அவை விரைவில் சரியாகிவிடும். ஆனால் மார்பு சளி அதிகமாகும் போது அதை கண்டுபிடிக்க முடியாது. ஆனால் இருமல், மூக்கடைப்பு சேர்ந்து வெளியேறும் சளியின் நிறம் அடர்ந்த மஞ்சள் அல்லது வெளிர் பச்சையாக வரும் போது நெஞ்சு சளி அதிகம் இருப்பதை உணரலாம். பெரும்பாலும் குழந்தைகளுக்குத்தான் இவை அதிகமாக காணப்படுகிறது.

முருங்கை டீ இவ்ளோ நல்லதா, இதை வீட்டிலும் தயாரிக்க முடியுமா?

கைக்குழந்தைகளும் நெஞ்சு சளியால் அவதிப்படுவதுண்டு. மருந்து மாத்திரைகளில் இவை தற்காலிகமாக குணமடைந்தாலும் அவை முழுதும் கரைந்து வெளியேறாத வரை அவ்வபோது மார்பு சளியை உண்டாக்கவே செய்யும். பாட்டி கால கைவைத்தியத்தில் இதை படிப்படியாக கரைத்து வெளியேற்றலாம்.

​தேங்காயெண்ணெய் + கற்பூரம்


பெரும்பாலானவர்கள் இந்த வைத்தியம் செய்வது தான். பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை இதை பயன்படுத்தலாம்.

தேவை :

தேங்காய் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி

சிறு வில்லை கொண்ட கற்பூர கட்டிகள் - 2

சிறிய வாணலியில் தேங்காயெண்ணெய் விட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து எண்ணெய் சூடேறியது அதில் கற்பூர வில்லைகள் சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள். சூடு ஆறியதும் முகம், நெற்று, மூக்கு, மூக்கை சுற்று. முதுகுப்பகுதி, கழுத்திலிருந்து மார்பு வரை என்று இலேசாக தடவுங்கள். கைக்குழந்தைகளுக்கு தடவும் போது அதிக எண்ணெய் வேண்டாம். அதிக சூடு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தினமும் 4 ல் இருந்து 6 முறை இதை தடவி வந்தால் நெஞ்சுக்கூட்டில் இருக்கும் சளி எவ்வளவு கெட்டியாக இருந்தாலும் கரைந்து வெளியேறிவிடும்.

ஒரு நாளில் இந்த மேஜிக் நடக்காது. ஒரு வாரம் வரையாவது இதை தொடர்ந்து செய்தால் சளி வெளியேறுவதை பார்க்கலாம். உடல் உஷ்ணத்தை சற்று கூட்டும் தன்மை கொண்டது என்பதால் இதை பயன்படுத்தும் போது அவ்வபோது மிதமான சூட்டில் வெந்நீர் குடித்துவரவேண்டும்.

இதற்கு சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

மூலிகை தேநீர் அல்லது வெதுவெதுப்பான நீர் மற்றும் எலுமிச்சையுடன் 2 டீஸ்பூன் தேனை கலந்து உட்கொள்வதன் மூலம் இருமலுக்கான சொந்த தீர்வை வீட்டிலேயே தயார் செய்யலாம்.

புதினாவில் உள்ள மெந்தால் சளியை நீக்க உதவுகிறது. புதினா தேநீர் குடிப்பதன் மூலம் அல்லது புதினா நீராவியை உட்கொள்வதன் மூலம் பயனடையலாம்.

இஞ்சி வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமா இருமலைக் குறைக்க உதவுகிறது. சளி அல்லது கபத்தை உருவாக்கும் இருமலில் இருந்து விடுபட நீராவியை எடுத்துக்கொள்வதன் மூலம் நிவாரணம் பெறலாம்.

சளி, இருமல் வந்துவிட்டால் தண்ணீரை சூடாக்கி குடிப்பதுடன் கொதிக்கும் நீரில் 2 மேசை கரண்டி சுக்கு தூளுடன் 1/4 மேசைக் கரண்டி எலுமிச்சை சாறு, 1 மேசை கரண்டி தேன் கலந்து பருகினால் நன்று.

நெஞ்சு சளியை உடனே தீர தினமும் 2 மேசை கரண்டி இஞ்சி சாற்றில் 2 மேசை கரண்டி தேன் கலந்து தினமும் 3 வேளை உண்ண வேண்டும்.

தொண்டை புண் மற்றும் ஈரமான இருமலுக்கு சிகிச்சையளிக்க உப்பு நீர் கொண்டு வாய் கொப்புளிக்கவும். ஏனெனில் உப்பு நீர் தொண்டையின் பின்புறத்தில் உள்ள கபம் மற்றும் சளியைக் குறைக்கிறது மற்றும் இருமலைப் போக்குகிறது.