×

சிசேரியன் குழந்தைகளுக்கு இது கம்மியாம் -தவிர்க்க சில குறிப்புகள் 

 

ஒவ்வொரு பெண்ணும் மறுஜென்மம் எடுக்கும் காலகட்டம் தான் பிரசவக்காலம். 10 குழந்தைகளை பதவிசாய் பெற்றபோது தெரியாத கவ லையும் வலியும் இப்போது ஒற்றை பிள்ளையில் பெற்றுவிடுகிறார்கள் இன்றைய பெரும்பாலானபெண்கள். குறிப்பாக சுகப்பிரசவம் குறைந்து சிசேரியன் அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது. இதனால் பிரசவக்காலம் தாண்டி வாழ்நாளில் பல பிரச்சனைகளையும் சந்திக் கிறார்கள். இதற்கு என்ன காரணம்? சிசேரியன் டெலிவரிக்கு பிறகு எப்படி இருக்க வேண்டும் என்ன செய்ய கூடாது போன்ற கேள்விக ளுக்கான பதில்களைப் பார்க்கலாம்.

​சிசேரியன்

சிசேரியன் இன்று பிரசவம் என்றதும் சகஜமாக எல்லோரும் கேட்கும் கேள்வியாகிவிட்டது. நார்மலா, சிசேரியனா என்னும் அளவுக்கு இரண்டும் சரிசமமாக மாறிவருகிறது. பிரசவத்தில் சிக்கல், குழந்தை தாய்க்கு ஏதேனும் ஆபத்து, உடல் பலவீனமான கர்ப்பிணிகள் உடல் நலத்தில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் சிசேரியன் செய்முறைதான் தாய் சேய் ஆரோக்கியத்துக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

சிசேரியன் முறை என்பது அறுவை சிகிச்சை முறை. கர்ப்பிணிகள் வயிற்றை கிழித்து குழந்தையை எவ்வித ஆபத்துமில்லாமல் காப்பாற்றுவார்கள். எல்லா பெண்களுக்கும் நார்மல் டெலிவரி சாத்திய மில்லை என்பதால் பல தருணங்களில் சிசேரியன் மேற்கொள்ளப்படுகிறது என்ற மருத்துவர்களின் ஆலோசனையை நாமும் ஏற்றுகொள்ளதான் வேண்டியிருக்கிறது.

2010ஆம் ஆண்டு வரை வெறும் 5% ஆக இருந்த சிசேரியன் பிரசவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இப்போது  30%ஆக அதிகரித்துவிட்டதாக அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

பொதுவாக கருவுற்ற 40 வாரங்களுக்குள் எந்த நேரத்திலும் சுகப்பிரசவத்திர்கான வலி வந்து குழந்தை பிறக்கும். ஆனால் அதற்கு மேலும் வலி வராவிட்டாலோ, அல்லது குழந்தையை வெளியே எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலோ தான் சிசேரியன் முறை பயன்படுத்தப்படும்

ஆனால் தற்போது ஒருசில மருத்துவமனைகள் கட்டணம் அதிகம் பெற வேண்டும் என்பதற்காக சிசேரியனை பரிந்துரை செய்வதாகவும், ஒருசில தாய்மார்கள் பிரசவ வலியை பொறுத்து கொள்ள முடியாமல் சிசேரியனுக்கு சம்மதிப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற பல காரணங்களால் தான் சிசேரியன் கடந்த 7 ஆண்டுகளில் 25% அதிகரித்துள்ளதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகின்றது. ஆனால் இன்னொரு ஆய்வு, சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைதான் பின்னாளில் தைரியமான முடிவை எடுப்பவர்களாக இருப்பதாகவும் ,சிசேரியன் குழந்தைகளுக்கு மன தைரியம் குறைவு என்று ஆய்வு கூறுகிறது.

சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள், அதிக உடல் அழுத்தத்துக்கு மத்தியில் பிறப்பார்கள். அதனால், `ஸ்டீராய்ட் ஹார்மோன்' சுரப்புகள் (Steroid Hormones) சீராக இருக்கும். இதனால் நுரையீரல் செயல்பாடு சீராகி, பிறந்து சில நிமிடங்களில் குழந்தை அழத்தொடங்கிவிடும். மூச்சுப் பிரச்னைகள் எதுவும் ஏற்படாது. சிசேரியன் மூலம் பிறந்த குழந்தைக்கு அழுத்தம் மிகக் குறைவாகவே தரப்பட்டிருக்கும். அதனால், `டிரான்சியன்ட் எக்யூப்மென்ட் ஆப் நியூபார்ன்' (Transient Equipment of newborn) எனச் சொல்லப்படும் சுவாசம் தொடர்பான சிக்கல்கள் வரக்கூடும். சில நிமிடங்களில் இது சரியாகிவிடும் என்பதால் பயப்பட வேண்டிய அவசியமில்லை
சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிரசவ நேரத்தில் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்கவே பெண்கள் சிசேரியனை நாடுகிறார்கள். இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் சிசேரியன் செய்துகொள்ளும் பெண்கள் மத்தியில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில், சிசேரியன் செய்துகொள்ளும் கர்ப்பிணிகளே பிரசவத்தின்போதும், அதற்குப் பின்னான காலங்களிலும் அதிக சிரமத்தை எதிர்கொள்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.


ஒரு ஆய்வில், 35 வயதைக் கடந்து சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு, ஏற்படும் ரத்தப்போக்கும் நுரையீரலில் ஏற்படும் ரத்தக்கட்டும் சுகப்பிரசவம் செய்துகொள்பவர்களைவிட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது. `பிரான்ஸ் தேசிய சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை ஆராய்ச்சி மையம்' (The French National Institute of Health and Medical Research) சார்பில் இந்த ஆய்வை முன்னெடுத்து நடத்திய மருத்துவர் கேத்தரின் இதுகுறித்து கூறும்போது, "எங்கள் ஆய்வின் முடிவு, சிசேரியன் சிகிச்சையைத் தவிர்க்க வேண்டும் என்பதில்லை. பல நேரங்களில், கர்ப்பிணிகளின் உயிரைக் காப்பாற்றும் சிகிச்சையாகவே அது உள்ளது. ஆனாலும், சுகப்பிரசவத்தைவிட சிசேரியன் சிறந்தது என்ற சிந்தனை தவறு