×

மாசம் முழுவதும் சிக்கன் சாப்பிடுவர்களை சிக்க வைக்கும் மோசமான நோய்கள்

 

சிலருக்கு தினமும் அசைவ உணவுகள் இல்லாமல் சாப்பாடு சாப்பிட முடியாது .இது சிக்கனில் அதிக புரத சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால் பலர் அதை தினமும் சாப்பிடுகின்றனர் .ஆனால் அதிக புரதமும் அவர்களின் இதயத்துக்கு ஆபத்தை விளைவிக்கும்

மேலும் இது பல்வேறு உணவுகளுடன் பொருந்துவது உடன், சமைப்பதற்கும் எளிதானது என்பதால் இதை விரும்பி வாங்குகின்றனர்

 சிக்கன் புரோட்டீன் நிறைந்த சத்தான உணவுதான்என்றாலும்  அதை சாப்பிடும் விதத்தில்தான் அதன் சத்து முழுமையாகக் கிடைக்கும் ,மேலும்

அதேபோல் என்னதான் ஆரோக்கியம் என்றாலும் தினசரி சாப்பிட்டால் அதுவும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர் .

அந்தவகையில் தினமும் சிக்கன் சாப்பிடுவதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

தினமும் சிக்கன் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

நீங்கள் வறுத்த சிக்கனை அதாவது சிக்கன் 65,தந்தூரி சிக்கன் ,என்று தினமும்  சாப்பிடுபவர் எனில், உங்கள் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்.

தொடர்ச்சியாக அதை தினமும் சாப்பிடுவது உங்கள் உடலின் ஒட்டுமொத்த வெப்பநிலையை அதிகரிக்கலாம். குறிப்பாக கோடை காலத்தில் சிக்கன் அதிக ஹீட்டை உண்டாக்க வாய்ப்புள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்

மேலும் இந்த சிக்கனை வழக்கமாக சாப்பிடுவது நிச்சயமாக எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் மற்றும் கொலஸ்ட்ரால் அளவினை அதிகரித்து நம் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் .

மேலும் சிக்கனின் சில வகை கோழிகள் சிறுநீர் பாதை நோய்த்தொற்று போன்ற உடல் உபாதைகளை உண்டாக்கலாம்

மேலும் தினசரி சிக்கன் உட்கொள்ளப்படும் போது நம் உடலின் இதய பகுதியில் கொழுப்பின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. கொழுப்பு அதிகரிக்கும்போது நம் உடலின் முக்கிய பகுதியான இதயத்தில் பிரச்சினை ஏற்படும்.அதனால் இந்த சிக்கனை அளவாக சாப்பிட்டு வளமாக வாழ்வோம்