உதடு பிரகாசமாய் இருக்க உதவும் குறிப்புகள்
பொதுவாகவே பெண்களுக்கு தங்களது சருமத்தையும் பிற உறுப்புகளையும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கும்.
ஆகவே வீட்டில் அதிகமாக எப்போதும் இருக்கக்கூடிய ஒரு பொருளான சர்க்கரையை வைத்து எப்படி உதட்டை பராமரிக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
1.சீனி தேவையான அளவு எடுத்து கொள்வோம்
2.அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் எடுத்து கொள்வோம்
3.மேற்கூறிய பொருளுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு எடுத்து கொள்வோம்
4.அடுத்து அதனுடன் ஒரு சிறிய பாத்திரத்தில் தேன், எலுமிச்சை மற்றும் சீனி சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
5.இப்போது அந்த சீனி மணல் போன்று இருக்கும் போது அதை உதட்டில் பூசி, இரண்டு நிமிடங்களுக்கு மேல் இருந்து கீழாக மசாஜ் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
6.பின் இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக என்று மாற்றி மாற்றி ஒரு இரண்டு நிமிடங்களுக்கு மீண்டும் மசாஜ் செய்ய வேண்டும்.
7.இறுதியாக இரண்டு நிமிடங்கள் முடிந்தவுடன் தண்ணீரினால் உதட்டை கழுவி விட வேண்டும்.
8.இப்போது உங்கள் உதட்டில் தெரியும் பிரகாசத்தை பாருங்கள்