×

சுவாச பிரச்சினையை சுளுக்கெடுக்கும் பழங்கள் .

 

முன்பெல்லாம் நமது வீட்டில் உள்ள முதியோர்தான் மூச்சு விட சிரமப்படுவார்கள் .ஆனால் இன்று இளம் வயதினர் கூட இந்த சுவாச பிரச்சினையால் அவதி படுகின்றனர் .நாம் நமது தவறான உணவு பழக்கத்தால் இப்படி இளம் வயதிலேயே சுவாச பிரச்சினை வந்து அவதி பட வேண்டியுள்ளது .எந்த தொற்று நோய் உலகில் பரவினாலும் அது நமது மூச்சு காற்றைத்தான் குறி வைக்கிறது .சரியான எக்சர்சைஸ் இல்லாதது ,உடலின் மீது அக்கறை இல்லாதது .இதய பலவீனம் போன்ற காரணங்களும் நமது சுவாச பிரச்சினைக்கு காரணம்

சுவாச பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக நீங்கள் ரொம்பவும் கஷ்டப்பட வேண்டியதில்லை. உடலில் ஆக்சிஜன் அளவை சரி செய்ய எந்தெந்த பழங்களை சாப்பிட வேண்டும் என்பதை இந்த பதிவில் மூலம்  தெரிந்து கொள்வோம். 

பேரிக்காய்களை உட்கொள்வதன் மூலம், உங்கள் உடலின் ஆக்ஸிஜன் அளவு சீராக இருக்கும். 

சிலர் அடிக்கடி பப்பாளி சாப்பிடுவது உண்டு .இந்த பப்பாளியில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரதங்கள், வைட்டமின்கள் ஏ, பி, சி போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. இது உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க உதவுவதோடு மட்டுமல்லாமல்,  உடலின் ஆற்றல் அளவை அதிகரித்து,  நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

எனவே, உங்கள் உடலில் ஆக்சிஜன் குறைந்தாலும் ,மல சிக்கல் பிரச்சினை இருந்தாலும் ,வயிறு பிரச்சினை இருந்தாலும்  பப்பாளியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்