×

இந்த எட்டு பொருள் உங்க தட்டுல இருந்தா ,உங்க மூளை எப்பவும் கெட்டு போகாது

 

சராசரியாக ஒரு மனிதனின் மூளை 1.3-1.4 கி இருக்கின்றது. உடலின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் மூளை மிக அவசியம் ஆகின்றது. ஹார்மோன்கள் சீராய் இயங்க, மூச்சு, இதயதுடிப்பு, சதைகளின் கட்டுப்பாடு, கை, கால் இயக்க ஒத்துழைப்பு, ஆழ்ந்து சிந்திக்க, உணர்ச்சிகள் என பல்வேறு செயல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆக இத்தனை வேலைகளையும் செய்ய மூளைக்கு அதிக சக்தி தேவைதானே. நமது உடலுக்குத் தேவைப்படும் சக்தியில் 20 சதவீதம் சக்தியினை மூளை எடுத்துக் கொள்கின்றது. இது வயது போன்ற பல காரணங்களைக் கொண்டு சற்று மாறுபடலாம். மூளை சிறப்பாக செயல்பட வேண்டும் என்றுதானே அனைவரும் விரும்புவர். நம்முடைய சில பழக்கங்கள், பாதிப்புகள் மூளை செயல்பாட்டுத்திறனை பாதிக்கின்றது என்பதனை அறிந்தால் நாம் அதனை சரி செய்து கொள்ளுவோம் அல்லவா.

சில தவறான பழக்கவழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால், நம் மூளை பலவீனமடையத் தொடங்குகிறது. மூளைக்கு ஏதேனும் பாதிப்பு என்றால், அது உடல் முழுவதையும் பாதிக்கும். எனவே மூளையை பாதிக்கும் கெட்ட பழக்கங்கள் உடனடியாக கைவிடப்பட வேண்டும்.

1. அதிக சர்க்கரை சாப்பிடுவது

அதிக இனிப்புகள் மூளையின் செயல் திறனை பாதித்து, அவரது அறிவாற்றல்  குறையத் தொடங்கும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் நினைவாற்றலும் மோசமாக பாதிக்கப்படும் என்கின்றனர். எனவே அதிக அளவில் இனிப்புகள் முக்கியமாக, சர்க்கரை கலந்த இனிப்புகள் தவிர்க்க வேண்டும்

2. அளவுக்கு அதிகமான கோபம்

சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட கோபப்படும் பழக்கம் உள்ளவர்களின் மூளை படிப்படியாக வேலை செய்வதை நிறுத்திவிடும் என்கின்றனர் நிபுணர்கள். கோபமாக போது, ​​​​மூளையின் நரம்புகள் மீது அழுத்தம் ஏற்படுகிறது. அது அவற்றை பலவீனமாக்குகிறது. இதனால் மூளையின் சக்தி குறையத் தொடங்குகிறது.

3. காலை உணவை தவிர்த்தல்

காலையில் காலை உணவைத் தவிர்க்கும் பழக்கம் மூளையின் செயல் திறனை பாதிக்கும். மூளையின் ஆற்றல் குறைந்து விடும். ஏனெனில், காலை உணவை தவிர்ப்பதால், உடலுக்கும் மனதுக்கும் அன்றைய நாளுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல், சோர்வாக இருக்கும். இந்தப் பழக்கம் மூளையை மட்டுமல்லாமல் உடலையும் சேர்ந்து பலவீனமாக்கும்.

4. தூக்கமின்மை

தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்கவில்லை என்றால், மூளைக்கும் முழுமையாக ஓய்வு கிடைப்பதில்லை. எனவே, சோர்வு காரணமாக மூளை திறமையாக வேலை செய்யாது. மேலும் முகத்தை மூடிக்கொண்டு தூங்கும் பழக்கம் காரணமாக, போதிய அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல், உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் மூளை செல்கள் பலவீனமடையத் தொடங்கும்.

ஆரோக்கியமான மூளைக்கு செய்ய வேண்டியவை

கீழ்கண்ட 8 உணவுகள் மூளையை கூர்மையாக்கும்

-பிளாக் சாக்லேட்

- க்ரீன் டீ

- ப்ரோக்கோலி

- வாதுமை பருப்பு

- பாதம் பருப்பு

- பெர்ரி

- மாதுளை

- பூசணி விதைகள்