வெள்ளை முடியை கருமையாக்கும் இயற்கை முறை
பொதுவாக தலை முடி நரைப்பது இன்று இளம் வயதினருக்கும் ஏற்படுகிறது .இதற்கு காரணம் அதிகம் ரசாயனம் கலந்த பொருட்களை பயன் படுத்துவது என்று கூறலாம் ,
இதற்காக ரசாயன பொருளை பயன்படுத்தாமல், வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களைக் கொண்டு எவ்வாறு எந்தவொரு பக்கவிளைவுகளும் இல்லாமல் கருமையாக்கலாம் என்று தெரிந்துக்கொள்வோம்.
1.இந்த இயற்கையான முடி கருமை பேஸ்ட் செய்வதற்கு இரண்டு பொருட்கள் மட்டுமே போதுமானது.
2.அந்த பொருட்கள் கரிய பவளம் ஒரு துண்டும், நெல்லிக்காய் சாறு 200 மில்லியும் தான் தேவை..
3., முதலில் ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் சாறை ஊற்றி வைத்து கொள்ளவும்
4.அடுத்து அதனுடன் கரிய பவளம் சேர்த்து,எடுத்து கொள்ளவும்
5.பின்னர் அந்த கலவையை குறைந்தது ஒரு 3 மணிநேரமாவது ஊற வைக்க வேண்டும்.
6.பின் அந்த ஊறிய கலவையை எண்ணெய் இல்லாத தலைமுடிக்கு பூசி வர வேண்டும் ,
7.இந்த கலவையை 3 மணிநேரம் வைத்து பிறகு குளித்தால் முடி கருமை பலனை பெறலாம்.
8. இதை வாரத்திற்கு இரண்டு முறை உபயோகித்தால் நரைத்த முடி கருமையாகி, நீளமாக வளரும்.