×

கழுத்தில் உள்ள கருமை நீங்க என்ன செய்யணும்  தெரியுமா ?

 

பொதுவாகவே பெண்களுக்கு கழுத்தில் கருமை என்பது அதிகமாகவே காணப்படும்.

அதற்கு காரணம் என்னவென்று தெரியாமல் கடைகளில் பல கிறீம்களை வாங்கி பயன்படுத்துவார்கள்.

இதனால் பலருக்கு தீங்கு தான் ஏற்படும். ஒரு சிலருக்கு ஒவ்வாமை அதிகரித்து கழுத்தில் கருமை என்பது அதிகரித்துவிடும்.

இதை எப்படி வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி இலகுவாக துடுக்கலாம் என இந்த பதிவில் மூலம் தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்
ஒரு மேசைக்கரண்டி - எலுமிச்சைச்சாறு

முட்டையின் மஞ்சள் கரு

தேன் - ஒரு மேசைக்கரண்டி

ஓலிவ் ஆயில் - 1/2 மேசைக்கரண்டி 
செய்முறை
முதலில் அனைத்தையும் ஒன்றாக கலந்து கழுத்தில் கீழ் இருந்து மேல் வரை 20 நிமிடம் வரை காய விட வேண்டும்.  

 பிறகு சூடான நீரில் கழுவ வேண்டும்.

இவ்வாறு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று வரை செய்த வர கழுத்தில் உள்ள கருமை நீங்கும். 

 வேறு முறையில் செய்ய வேண்டுமென்றால் எலுமிச்சை மற்றும் தேன், உருளைக்கிழங்கு சேர்த்து கழுத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை காய வைத்துக் கழுவினா கருமை நீங்கும்