×

வாய் துர்நாற்றத்தை தவிர்க்கும் வழிகள் 

 

பொதுவாக சிலரின் வாயில் துர்நாற்றம் வருவதால் அவர் அடுத்தவரிடம் பேசவே கூச்ச படுவதுண்டு .இதனால் ஒருவர் மிகவும் சிரமப்படுவர் ,இந்த துர்நாற்றத்திற்கான காரணத்தை தெரிந்து கொண்டு அந்த உணவுகளை ஒதுக்கி வைக்கலாம் .அல்லது அவற்றை சாப்பிட்டு விட்டு வாயை சுத்த படுத்தலாம் .இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 
1.இறைச்சி சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் வரும் .ஏனெனில் இறைச்சி நுண்ணுயிரிகளான பாக்டீரியாக்களுக்கு புரதம் (புரோட்டீன்) மிகவும் பிடித்தமானது.
2. இறைச்சி சாப்பிட்டால் அவற்றிலுள்ள புரதத்தை பாக்டீரியாக்கள் அம்மோனியா கூட்டுப்பொருள்களாக சிதைக்கின்றன. 
3.இந்த இறைச்சியின்  காரணமாக வாயில் துர்நாற்றம் எழுகிறது. 
4. மேலும் சில வகை பழங்களும் துர்நாற்றத்திற்கு ஒரு காரணம். ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்ற சிட்ரிக் வகை பழங்களும் பாக்டீரியாக்களுக்கு விருந்து போன்றவை. 
5.அதிக அளவு இப்பழங்களை சாப்பிடுவதும் துர்நாற்றத்திற்குக் காரணமாகலாம். 
6. பொதுவாக நாம் அடிக்கடி சாப்பிடும் மீன்களில் ஒருவகை நாற்றம் உண்டு. 
7.அதிக நாற்றத்தை கொடுக்கும் டிரைமெத்தில் அமினோக்கள் என்ற கூட்டுப்பொருள் மீன்களில் உள்ளது. 
8.இந்த மீனை சாப்பிட்ட பிறகும் வெகு நேரம் வாயில் தங்கி துர்நாற்றம் வீச காரணமாகக்கூடும். 
9. பால் பொருள்களில் உள்ள  அமினோ அமிலங்கள் , பாக்டீரியாக்களை ஊட்டி வளர்க்கக்கூடிவை. 
10.இந்த பாக்டீரியாக்கள் வெளியிடும் ஹைட்ரஜன் சல்பைடு துர்நாற்றத்தை எழுப்பக்கூடும்.
11.வாய் துர்நாற்றம் போக்க தினமும் இரு வேளை பல் துலக்குதல் அவசியம்.
12.வாய் துர்நாற்றம் போக்க பல் இடுக்குகளை சுத்தம் (floss) செய்ய வேண்டும்