×

முதுகு வலிக்கு இப்படியெல்லாம் காரணம் இருக்குமா ?

 

முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே வந்த முதுகு வலியானது இப்போது இந்த கம்ப்யுட்டர் யுகத்தில் இளம் வயதினருக்கும் வருகின்றது .இதற்கு காரணமாக ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்ப்பது அல்லது அதிக எடையுள்ள பொருளை தூக்குவது ,மற்றும் மாடிப்படி ஏறுவது,பைக்கில் நீண்ட தூரம் போவது  போன்ற காரணங்கள் .மேலும் வாயு பொருளை அதிகமாக சாப்பிட்டாலும் உதாரணமாக பருப்பு மற்றும் காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவது போன்ற காரணத்தாலும் முதுகு வலி உண்டாகிறது .இந்த முதுகு வலிக்குபுகை பிடிப்பதும் ஒரு காரணம் என கூறப்படுகிறது .சிறுநீர் ,வாந்தி ,கண்ணீர் ,ஏப்பம் ,மலம் போன்றவற்றை அடக்குவதாலும் முதுகு வலி ஏற்படுகிறது 

இந்த வலியானது முதுகில் மேல்பகுதி, நடுப்பகுதி, கீழ்பகுதி என மூன்று வகையான கட்டமைப்புகளில் வலி ஏற்படுகிறது.

ஒருவருக்கு பல்வேறு காரணத்தால் உண்டாகும் மனஅழுத்தமும் முதுகு வலியை ஏற்படுத்தும். மிகுந்த மனஅழுத்தத்திற்கு ஆளாகும் போது முதுகு தசைகள் இறுக்கமடைய ஆரம்பித்து அந்த இடத்தில் வலி ஏற்படும்

மேலும் ஒருவரின் கால்களின் நீளத்தில் மில்லி மீட்டர் அளவில் வேறுபாடு இருந்தால் கூட முதுகில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். அதனால் கால்களின் உயரத்தை சீராக்கும் விதத்தில் ஷூக்களை அணிவது நல்லது.

தசை நார்களில் ஏற்படும் காயங்களுக்கும்,முதுகு வலிக்கும் தொடர்பு இருக்கிறது. அந்த காயங்கள் வலியை ஏற்படுத்தும் போது முதுகெலும்பை சுற்றிலும் பாதிப்பு உருவாகி ,அது வலியை அதிகப்படுத்தி நம்மை தீராத தொல்லையில் ஆழ்த்தி விடும் .