முதுகு வலியை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?
பொதுவாக முதுகு வலிக்கு பல காரணங் கள் சொல்லப்பட்டாலும், அடிப்படைக் காரணங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று, இடைவட்டு விலகுவது (Disc prolapse). அடுத்தது, முதுகு முள்ளெலும்புகளின் (Vertebrae) பின்புறமுள்ள அசையும் மூட்டுகளில் வீக்கம் ஏற்படுவது. இந்தக் காரணங்களால் தண்டுவட நரம்பு செல்லும் பாதை குறுகிவிடுகிறது.இந்த முதுகு வலியை இயற்கை உணவு மூலம் எப்படி குணமாக்குவது என்று இந்த ப்பதிவில் பாக்கலாம்
1.முதுகு வலி நம்முடைய செயல்பாட்டை அப்படியே முடக்கிப் போட்டுவிடும்.
2.முதுகுவலியை குணமாக்க ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதை தவிர்த்து, உடலுக்கு வேலை கொடுப்பது அவசியம்.
3.சில உணவுகளை அதிகமாக சாப்பிடுவதாலும் முதுகு வலியை தவிர்க்கலாம்.
4.. சரிவிகித உணவு உடலுக்குக் கிடைக்காவிட்டால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்காமற்போய் முதுகுவலி ஏற்படலாம்.
5.ஆகவே,முதுகு வலி வராமலிருக்க , எடையை குறைப்பதற்காக பட்டினி இருப்பதை தவிர்க்கவேண்டும்.
6. முதுகு வலி வந்தால், வைட்டமின் டி குறைவு முக்கியமான காரணமாக இருக்கலாம்.
7.ஆகவே, முதுகு வலியை தவிர்க்க இரத்தத்தில் போதுமான அளவு வைட்டமின் டி இருக்கிறதா என்று சோதித்து பார்க்கவேண்டும்.
8. முதுகு வலியை தவிர்க்க 25 ஹைட்ராக்ஸி வைட்டமின் டியின் அளவும் 50 முதல் 60 ng/ml என்ற அளவில் இருக்கவேண்டும்.
9. முதுகு வலியை தவிர்க்க முட்டை, பால், மீன், காளான் ஆகியவற்றை சாப்பிட்டால் வைட்டமின் டி சத்து உடலில் சேர வேண்டும்
10. முதுகு வலியை தவிர்க்க தினமும் 2 தேக்கரண்டி அளவு கறுப்பு எள்ளை உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
11.. முதுகு வலியை தவிர்க்க நாம் உண்ணும் கறுப்பு எள், நாம் சாப்பிடும் உணவிலிருந்து கால்சியம் சத்து உடலில் சேருவதற்கு உதவும்..