நம்முடைய எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது இந்த பழம்
இரவு முழுவதும் அது ஊறிய பிறகு காலையில் அத்திப்பழத்தை ஊற வைத்த தண்ணீரிலிருந்து எடுத்து கொள்ளுங்கள். வெறும் அத்திப்பழத்தை மட்டும் சாப்பிடுங்கள். இதை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். வேண்டுமென்றால் தேன் கலந்தும் சாப்பிடலாம். ஊற வைத்த அத்திப்பழத்தை காலையில் சாப்பிடும் பொழுது மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கும்.
மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் தொடர்ந்து அத்திப்பழத்தை ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வரும் பொழுது அவர்களுடைய மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் சரியாகும். இதற்கு காரணம் அத்திப்பழத்தில் இருக்கக்கூடிய கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள். இது நம்முடைய குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது நம்முடைய செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
அத்திப்பழம் நம்முடைய எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. காரணம் அத்திப்பழத்தில் கால்சியம் உள்ளது. இது நம்முடைய எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு அவசியம். நம்முடைய உடல் கால்சியத்தை தானாகவே உற்பத்தி செய்யாது. எனவே நம்முடைய உடலுக்கு தேவையான கால்சியத்தை கொடுக்கக்கூடிய உணவுகளைச் சாப்பிடுவது முக்கியம்.