×

மதிய தூக்கத்தால் நம் மனதில் ஏற்படும் மாற்றம் என்ன தெரியுமா ?

 

நம் உடலுக்கு ஆற்றல் தருவது உணவு .ஆற்றல் குறைந்ததும் நம் உடலுக்கு பசியுணர்வு ஏற்பட்டதும் நாம் ஆற்றலை பெற உணவு உண்கிறோம் .ஆனால் மதியம் சாப்பிட்டதும் நமக்கு தூங்கவேண்டும் என்ற உணர்வு ஏற்படுவது எதனால் ,நம் உடலுக்கு உணவு மூலம் இன்சுலின் கிடைக்கிறது .இந்த இன்சுலினை கிடைக்க உணவு செரிமானம் நடைபெறும்போது தூக்க உணர்வு ஏற்படுகிறது .ஆனால் தொடர்ந்து நாள் முழுவதும் தூக்க உணர்வு ஏற்பட்டால் அது தைராய்டு அல்லது வேறு ஏதாவது நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம் ,அந்த மாதிரி நேரங்களில் தகுந்த மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்

பொதுவாக மதிய சாப்பாட்டுக்குப் பிறகு, மிகச் சரியாக 20 நிமிடங்கள் தூங்கி எழுந்தால், வேலைத் திறன் அதிகரிக்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, ஜப்பானில் சில அலுவலகங்களில் மதியம் 20 நிமிடம் தூங்க அனுமதி அளிக்கப்படுவதால் அவர்களின் அறிவு திறன் நன்றாக இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர் ,அதனால் அங்கு தொழிலாளர்களுக்கு தூங்க அனுமதி அளிக்கப்படுகிறது  .

அதிக புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டைக் கொண்ட உணவுகளான சிக்கன் குழம்பு, சாதம் மற்றும் பருப்பு ஆகியவற்றை மதியம் சாப்பிட்டால், செராட்டினான் அதிக அளவில் சுரக்கும். இதனால் தூக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மதிய தூக்கத்தை தவிர்க்க காபி மற்றும் டீ ஆகியவற்றை குடித்தால், உடனடியாக மூளை நியூரான்கள் தூண்டப்பட்டு தூக்கம் தடைபடும். ஆனால், அதிகமான கஃபைன் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும். மாலையில் குறைந்த அளவு கஃபைன் பானம் அருந்துவது தான் மிகவும் நல்லது.