×

எப்போதும் மகிழ்ச்சியாக வாழ எட்டு வழிகள் .

 

இன்று பலரும் ஆரோக்கியத்தை விற்று விட்டு பணத்தை சம்பாதிக்கின்றனர் .மேலும் மகிழ்ச்சியை தொலைத்து விட்டு நாள் முழுவதும் ஓடி கொண்டிருக்கின்றனர் .வாழ்க்கையில் ஒரு கட்டத்திற்கு பிறகு நிம்மதியை தேடி பல ஆசிரம வாசிகளிடம் தஞ்சம் புகுந்து அங்கும் சந்தோஷமில்லாமல் வாழ்ந்து வருகின்றனர் .அதனால் சந்தோஷம் நம் மனதில்தான் உள்ளது .எப்படி மகிழ்ச்சியாய் வாழலாம் என்று பின்வருமாறு கூறியுள்ளோம் .படித்து பயன் பெறுங்கள்

1.தினமும் ஒவ்வோரு மனிதரும் போதியளவு நேரம் தூங்க வேண்டும்.

2.தினமும் குறைந்தது 10 நிமிடங்களாவது கண்களை மூடி அமைதியான இடத்தில் இருந்து தியானம் செய்ய வேண்டும்.

3.நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு அதிகளவு நேரம் செலவிடுதல்

4.இயலுமானவரை சமூக வலைத்தளங்களில் அதிகளவு நேரம் செலவிடுவதை தவிர்த்தல் வேண்டும்.

5.இயலுமானவரை மகிழ்ச்சியாக இருப்பதற்கு நன்றியுணர்வு மிக்க மனிதர்களோடு நல்ல உறவினைப் பேணிக் கொள்ள வேண்டும்.

6.எப்போதும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய பசுமையான இடங்களுக்கு சென்று இயற்கையை இரசிக்க வேண்டும்.

7.உடற்பயிற்சி தினமும் செய்வதால்  மகிழ்ச்சி உணர்வை அதிகரிக்கும்.

8.எப்போதும் மனதிற்கு பிடித்தமான மென்மையான இசையால்  மனதிற்கு இதமான மகிழ்ச்சியை தரும்.