×

தூக்கமின்மை… உடல் பருமன்… 40 + வயதனாவர்களின் கவனத்திற்கு!

அங்கிள்… இந்த வார்த்தையை முதன்முறையாகக் கேட்கத் தொடங்குவது நாற்பது வயதைக் கடக்கும்போதுதான். பலருக்கு இப்படி ஒருவர் அழைத்துவிட்டாலே இரண்டு நாட்களுக்கு தூக்கம் வராது. அதுமட்டுமல்ல சிக்கல். அதுவரை உடல் தன் இயல்புக்கு வளைந்துகொடுத்திருக்கும். நாற்பதைக் கடக்க… கடக்க ஒவ்வொரு பிரச்சினையையும் உடல் காட்டிக்கொடுக்க ஆரம்பித்தும். அப்போதுதான் நாம் உடலை எப்படிக் கவனிக்காது கெடுத்து வைத்திருக்கிறோம் என்பது நமக்கே தெரியும். உடனே உடற்பயிற்சி, டயட் என மனம் திட்டமிடும். ஆனால், இரண்டு நாட்களுக்குப் பிறகு எதுவும் தொடராது. அப்படித்
 

அங்கிள்… இந்த வார்த்தையை முதன்முறையாகக் கேட்கத் தொடங்குவது நாற்பது வயதைக் கடக்கும்போதுதான்.

பலருக்கு இப்படி ஒருவர் அழைத்துவிட்டாலே இரண்டு நாட்களுக்கு தூக்கம் வராது. அதுமட்டுமல்ல சிக்கல். அதுவரை உடல் தன் இயல்புக்கு வளைந்துகொடுத்திருக்கும். நாற்பதைக் கடக்க… கடக்க ஒவ்வொரு பிரச்சினையையும் உடல் காட்டிக்கொடுக்க ஆரம்பித்தும்.

அப்போதுதான் நாம் உடலை எப்படிக் கவனிக்காது கெடுத்து வைத்திருக்கிறோம் என்பது நமக்கே தெரியும். உடனே உடற்பயிற்சி, டயட் என மனம் திட்டமிடும். ஆனால், இரண்டு நாட்களுக்குப் பிறகு எதுவும் தொடராது.

அப்படித் தொடரா விட்டால் நிச்சயம் மருத்துவமனையின் துணையைத்தான் தேட வேண்டியிருக்கும். அதனால், சில பழக்கங்களை மேற்கொள்வது நாற்பது வயதைக் கடந்தவர்களுக்கு அவசியம்.

புகை: உடல்நலத்தைக் கெடுப்பதில் முதலில் இருப்பது புகை. டென்ஷனைப் போக்குகிறது… 20 வருடப் பழக்கம்… விட்டாலும் போக மாட்டேங்குது… என்று என்னதான் காரணம் சொன்னாலும் அதை உடல் ஏற்றுக்கொள்ளாது. குறிப்பாக, நுரையீரல் ஒரு வார்த்தையைக் கூட கேட்காது. எனவே, முதல் விஷயமாக சிகரெட் புகைப்பதை விட்டொழியுங்கள்.

மது அருந்துபவர்களாக இருந்தால் அதையும் இந்த நொடியிலிருந்து விட்டு விடுங்கள். மேலும் போதை பாக்கு பழக்கமும் அறவே கூடாது.

எடை: உடல் பருமன் என்பது பல பிரச்சினைகளைக் கொண்டு சேர்த்துவிடும். அதனால் உங்களின் பிஎம்ஐ செக் பண்ணி, உடலின் உயரத்துக்கும் வயதுக்கும் ஏற்ற உடல் எடையைத் தக்க வையுங்கள். எடை அதிகப்பது மட்டுமல்ல, குறைவதும் ஆபத்தே. அதனால், சரியான எடையுடன் ஆரோக்கியமாக இருப்பதே நல்லது.  

தூக்கமின்மை: நாற்பது வயதைக் கடந்தவர்கள் அதிகம் எதிர்கொள்வது தூக்கமின்மை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று எதிர்கால பொருளியல் தேவை. அடுத்து, உடல் சார்ந்த சிக்கல்கள். என்ன காரணமாக இருந்தாலும் கெடுவது உடல்நிலைதான்.

உங்களின் ஓய்வுக்குப் பின் எவ்வளவு பொருளியல் தேவை என்பதை வரையறுங்கள். அதை கற்பனையில் வரையறுக்காது, உங்களின் சம்பளத்தைக் கொண்டு திட்டமிடுங்கள். இது முறையாகச் செய்தால் தூக்கமின்மையின் முதல் காரணத்தை சரி செய்துவிடும்.

உடல்ரீதியான சிக்கல்கள் என்னென்ன என்று பட்டியலிடுங்கள். அதற்கான சிகிச்சை மற்றும் பயிற்சிகளை ஒன்று விடாமல் செய்யுங்கள். இது சாய்ஸில் விடக்கூடியது அல்ல கட்டாயம். அதனால் அவற்றை விடாது செய்யுங்கள்.

நாற்பது வயதைக் கடந்தவர்கள் ஒருநாளைக்கு எட்டு மணி நேரம் தூங்குவது அவசியம். விடியற்காலையில் எழுவதுபோல தூங்கச் செல்லும் நேரத்தை அமைத்துக்கொள்ளுங்கள்.

உணவுப் பழக்கம்: இதுவரை எப்படியோ இனி அரிசியைக் குறைத்து காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். கூடவே மருத்துவர் இதெல்லாம் வேண்டாம் எனச் சொல்லும் உணவுகளை ஒருமுறைதானே என்று சாப்பிட வேண்டாம். சிகிச்சை, பயிற்சியை விடவும் முக்கியம் டயட். எனவே எந்தக் காரணத்தைக் கொண்டும் டயட்டை விட்டு விடாதீர்கள்.

நொறுக்குத் தீனிகளைத் தவிருங்கள். ஏனெனில், அது சத்தான உணவு சாப்பிடும் அளவை குறைத்துவிடும் அல்லது தவிர்க்கச் சொல்லிவிடும். செரிமான சிக்கல், பசி ஏற்படுவது உள்ளிட்ட பிரச்சினைகளும் ஏற்படலாம்.

செக்கப்: 40 வயதைக் கடந்தவர்கள் சுகர், பிபி செக்கப் செய்துகொள்வது நல்லது. அதேபோல கண்களின் பார்வைத் திறன் செக்கப்பும். எதுவும் இல்லையெனில் மகிழ்ச்சியே. ஆனால், ஏதேனும் ஒன்றின் தொடக்கம் எனில், முறையாக சிசிக்சையை ஆரம்பம் முதலே எடுத்துக்கொள்வது நல்லது. பெரிய அளவுக்குச் சிக்கல்கள் வராமல் தடுக்க இதுவே நல்ல வழி.