இந்த டீ குடிப்பது பதட்டத்தைக் குறைக்கவும், அமைதியான உணர்வை ஊக்குவிக்கவும் உதவும்.
பொதுவாக தேநீர் நமக்கு புத்துணர்வை தர கூடியது .அதனால்தான் தேநீர் குடிக்கும் பழக்கம் உலகம் முழுவதும் இருக்கிறது .ஆனால் சிலவகை தேநீர் நம் உடலில் உண்டாகும் நோய்களுக்கு மருந்தாகவும் செயல் படுகிறது .அந்த வகையில் எந்த தேநீர் குடித்தால் என்னென்ன நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1. வலேரியன் வேர் தேநீர் என்பது சீனாவில் பிரபலமானது .இது கவலை, வலி, தூக்கமின்மை மற்றும் பதட்டம் ஆகியவற்றிலிருந்தும் விடுபடவும் உதவுகிறது.
2.அஸ்வகந்தா ஒரு அடாப்டோஜெனிக் மூலிகையாகும், இது மன அழுத்தத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது
3.சிலர் அஸ்வகந்தா தேநீர் குடிப்பர் .இதை குடிப்பது பதட்டத்தைக் குறைக்கவும், அமைதியான உணர்வை ஊக்குவிக்கவும் உதவும்.
4.மேலும் இந்த அஸ்வகந்தா உடலில் உள்ள ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது.
5.க்ரீன் டீ- பதட்டத்தை குறைக்க சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.
6. க்ரீன் தேநீரை உட்கொள்ளும் மாணவர்கள் குறைந்த அளவிலான மன அழுத்தத்தை எதிர்க்கொள்கிறார்கள் என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
7.துளசியானது பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் மன அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
8.துளசி தேநீர் குடிப்பது பதட்டத்தை குறைப்பதுடன் நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மையினையும் கொண்டுள்ளது.
9.ரோஸ் டீ உலர்ந்த ரோஜா இதழ்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது மற்றும் லேசான, மலர் சுவையினையும் தன்னகத்தை கொண்டு உள்ளது.
10.ரோஸ் டீ பதட்டத்தைத் தணிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது