×

வெறும் வயிற்றில் டீ குடிப்போரின் உடல் பெறும் தீமைகள்

 

நாம் அன்றாடும் வாழ்வில் டீ காபி குடிப்பதை ஒரு பழக்கமாக காலந்தோறும் செய்துகொண்டு வருகின்றோம். ஆனால் இப்படி டீ, காபி குடிப்பது சரியா தவறா என்று நாம் என்றைக்குமே சிந்தித்து கிடையாது. இவற்றின் மூலம்  நமக்கு நன்மை மட்டுமே கிடைக்கிறது என்று நம்பி வருகின்றோம்.இவற்றின் தீமைகளை நாம் தெரிந்து கொள்வதில்லை. 

 ஆதாவது பசும்பால் உடல் நலத்திற்கு நன்மைகளையும் போதுமான சத்துக்களை கொடுக்கிறது ஆனால் அவற்றில் கலக்கபடும் டீ தூள் மற்றும் காபி தூள் பாலில் உள்ள சத்துக்களை குறைத்துவிடுகிறது. மேலும் தற்ப்போது கடைகளில் விற்க்கபடும் பாக்கேட் பால் முற்றிலும் நச்சு தன்மையை உடையவை. ஆனாலும் இவற்றை மூன்று வேளையும் குடித்துகொண்டு தான் வருகின்றோம்.

சரி இந்த டீ, காபி நமது உடலில் எவ்வளவு தீங்குகளை விளைவிக்கிறது என்பதை கீழே உள்ள பதிவில் பார்க்கலாம்.

 ஒரு நாளைக்கு 400ml மட்டுமே தேனீர் அருந்த வேண்டும். ஆதாவது இரண்டு கப் டீ அல்லது காபி. 
அளவுக்கு மீறி ஒரு நாளைக்கு நான்கு முறை அல்லது 5முறை நீங்கள் டீ பருகும் போது. உங்கள் உடலில் coffeine அளவு அதிகமாக சேரும் இவை உங்களின் மூலையை தூண்டி விடும். நீங்கள் பொதுவாக தூங்ககூடிய நேரத்தையும் தூங்க விடாமல் செய்துவிடும்

பலர் வெறும் வயிற்றில் டீ குடிக்கிறார்கள்

சிலருக்கு அதிகாலையில் எழுந்தவுடன் டீ குடிக்கும் கெட்ட பழக்கமும் உள்ளது. இதை 'பெட் டீ' என்றும் சொல்வார்கள். இதற்கு பழக்கப்பட்டவர்களால், இது இல்லாமல் அன்றைய வேலையைச் சரியாகச் செய்ய முடியாது. இது தவிர, அலுவலகத்தில் அதிகாலை ஷிப்ட் இருப்பவர்களால், நிச்சயமாக டீ இல்லாமல் வாழ முடியாது. ஏனென்றால் அவர்கள் தூங்குவதற்கு இந்த பானத்தை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள்.

'பெட் டீ' ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல

காலையில் தேநீர் அருந்தும் பழக்கம் மனதிற்கு ஒரு வகை அமைதியை தரலாம். ஆனால், இது உடல் ஆரோக்கியத்திற்கு அதிக கேடை விளைவிக்கும். ஏனெனில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் பல பக்க விளைவுகள் ஏற்படும். பசித்த வயிற்றில் தேநீர் அருந்துவது நல்லதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

'பெட் டீ' குடிப்பதால் ஏற்படும் கடுமையான தீமைகள்

1. பெட் டீ குடிப்பதால் வரும் மிகப்பெரிய பிரச்சனை அசிடிட்டி, மலச்சிக்கல். இது செரிமான அமைப்புக்கு நல்லதல்ல.

2. காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் பித்த சாற்று செயல்முறை சரியாக நடக்காமல், உடலில் பதட்டம் உண்டாகிறது.

3. நீங்கள் அதிகமாக டீ குடித்தால், அது சிறிது நேரம் உங்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தலாம். ஆனால் அது தூக்கக் கலக்கத்தை உண்டுபண்ணும்.

4. காலையில் எழுந்தவுடன் டீ குடிப்பதால், அதில் சர்க்கரை உள்ளடக்கம் இருப்பதால், உங்கள் எடையை இது வேகமாக அதிகரிக்கக்கூடும்.

5. பசியுடன் இருக்கும்போது டீ குடிப்பதால் அல்சர் பிரச்சனை வரக்கூடும். அதே போல் புரோட்டீன் குறைபாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.

6. பெட் டீ குடிப்பதால் நரம்பியல் பிரச்சனைகள் ஏற்படலாம். இதன் காரணமாக பசியின்மை ஏற்படும் அபாயமும் உள்ளது.

7. தேநீரில் காஃபின் அளவு அதிகமாக உள்ளது. இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.