இந்த அறிகுறிகள் இருந்தால் கர்ப்ப பையில் கட்டி வளருதுன்னு அர்த்தம்
பொதுவாக இந்த காலத்து உணவு முறை மற்றும் எல்லா வேலைக்கும் மெஷின் இருக்கும் சூழலில் உடலுழைப்பு என்பது இல்லாமல் போனதால் கருப்பையில் கட்டிகள் வளருகிறது .இந்த கட்டியின் அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.இடுப்பு பகுதிக்கு கீழே, வலது அல்லது இடது புறத்தில் வலி இருப்பது.
2.இந்த இடுப்பு பகுதியில் அல்லது வேறு இடத்தில் உடற்பயிற்சியின் போது பாரமாக இருப்பது போல் நீங்கள் உணர்ந்தால் கருப்பையில் கட்டி வளருதுன்னு அர்த்தம் .
3.அடிவயிற்று வலி மற்றும் வீக்கம் என்பது வயிறில் வேறு எதோ ஒன்று உருவாவதன் காரணமாக இருக்கலாம்.
4.கருப்பை பைப்ராய்டு கட்டியைப் போல் கருப்பை நீர்க்கட்டியும் வயிறு கனமான உணர்வைத் தரும்.
5.இது மலச்சிக்கல் போன்ற உணர்வைத் தரும்.
6.சிறுநீர் கழிப்பதில் அல்லது மற்ற செயல்பாடுகளில் வேறு எந்த பிரச்சனையும் இல்லாமல், ஆனால் வயிறு கனத்த உணர்வு மட்டும் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நீடித்தால் கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.
7.கருப்பையில் நீர்க்கட்டிகள் பெரிதாக வளரும்போது, கருப்பைக்கு பின், சரியாக கருப்பை வாய் அருகே வளர்ந்து இருந்தால் உறவின் போது வலி தோன்றலாம்.