×

கடுகு எண்ணெயுடன் பூண்டை அரைச்சி தேச்சா ,எந்தந்த வலியெல்லாம் பறந்து போகும் தெரியுமா ?

 

சர்விகல்  ஸ்பான்டைலிடிஸ் என்ற கழுத்துவலி அதிக நேரம் தூங்குவதாலும், தவறான நிலையில் அதிக நேரம் அமர்ந்திருப்பதாலும் முதுகெலும்பில் பாதிப்பு ஏற்பட்டு கழுத்தில் வலி ஏற்படுகிறது. இது இன்றைய தலைமுறையினர் பலரை பெரிதும் பாதிக்கிறது .அவர்கள் ஆங்கில வைத்தியத்தில் நிரந்தர தீர்வு கிடைக்காமல் அவதியுறுகிறார்கள் .இதற்கு ஆயுர்வேதத்தில் பின்வரும் முறையில் தீர்வு கிடைக்கும் 

இந்த கடுமையான வலியை உண்டாக்கும் சர்விகல் வலியால் பிரச்சனை உள்ளவர்கள்,  பூண்டை அரைத்து அதை கடுகு எண்ணெயுடன் கலந்து வலியுள்ள  இடங்களில் தடவலாம். அல்லது இந்த எண்ணெயை குளிர்ச்சியாக அல்லது சிறிது சூடாக்கி, பாதிக்கப்பட்ட இடத்தில் மசாஜ் செய்யலாம். பூண்டுக்கு இந்த வலியை குணமாக்கும் பவர் உண்டு 

அது மட்டுமல்லாமல் பின்வரும் இந்த 2 எண்ணெய் சர்விகல் வலியை நீக்கும் சக்தியுடையது 

1. ஆமணக்கு எண்ணெய்

சர்விகல் வலிக்கு ஆமணக்கு  எண்ணெயைக் கொண்டு தொடர்ந்து கழுத்தை மசாஜ் செய்து வந்தால் சர்விகல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று சித்த வைத்தியத்தில் கூறப்பட்டுள்ளது 

2. நல்லெண்ணெய்

சர்விகல் வலியை விரட்ட நல்லெண்னெயை   கைகளில் தடவி பாதிக்கப்பட்ட இடத்தில் மசாஜ் செய்யவும். இது நாள்பட்ட வலியிலிருந்து நிவாரணம் அளித்து வலியில்லா வாழ்வுக்கு வழி காமிக்கிறது .