×

திட்டு திட்டா முடி கொட்டிய இடத்தில்  கொத்து கொத்தா வளர செய்யும் இந்த கோடை கால ஆயில் 

 

நாம் அனைவரும் பாதாமை விரும்பி சாப்பிடுவது உண்டு. இந்த பாதம் கூர்மையான நினைவாற்றலுக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் பயன்படுவதால் தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதாமை சாப்பிட சொல்லி வலியுறுத்துவார்கள். இந்த பாதாமில் அதிகப் புரதம், ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ போன்ற பல்வேறு சத்துக்கள் இருப்பதால், இது நமது சருமத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் பல்வேறு நன்மைகளை தருகிறது என்பதில் சந்தேகமில்லை.

சமீபத்தில் பெரும்பாலான மக்கள் கூந்தல் பராமரிப்பில் பாதாம் முக்கிய பங்கை வகிக்கிறது என்பதை உணர்ந்துள்ளனர். குறிப்பாக பாதாமை எண்ணெயாக பயன்படுத்தும் பொழுது அது கூந்தலுக்கு நல்ல பலனை தருகிறது.

 பாதாம் எண்ணெயில் அதிக அளவு மெக்னீசியம், கொழுப்பு அமிலங்கள்,விட்டமின் டி,ஏ,ஈ போன்ற ஊட்ட சத்துக்கள் உள்ளது.எனவே இவை நம்முடைய கூந்தல் வளர்ச்சிக்கும் நம்முடைய சரும பிரச்சனைக்கும் சிறந்த நிவாரணமாக இருக்கும். எனவே இந்த பாதாம் எண்ணெயை தினமும் நம்முடைய உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

கூந்தல் வளர்ச்சி:

நம்முடைய முடி அடர்த்தியாக வளர வைப்பதில் இந்த பாதாம் எண்ணெய்க்கு மிக பெரிய பங்கு உள்ளது. இதில் உள்ள ஊட்ட சத்துக்கள் நம்முடைய முடிக்கு தேவையான ஊட்ட சத்தை தருகிறது. இதற்கு நாம் தூங்கும் முன் இரவில் பாதாம் எண்ணெயை தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின் காலையில் எழுந்து குளிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் நம் தலை முடி நன்றாக அடர்த்தியாக வளரும்.

பொடுகு தொல்லை:

பாதாம் எண்ணெய் நம்முடைய பொடுகை நீக்கும் சக்த்தி கொண்டது.நம்முடைய தலையி இறந்த செல்கள் படிவதையே நாம் பொடுகு என அழைக்கின்றோம். பாதாம் எண்ணெயில் உள்ள வைட்டமின்கள் நம்முடைய தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி நம்முடைய தலை முடி நன்றாக வளர உதவுகிறது.இதற்க்கு இந்த பாதாம் எண்ணெயை தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். ஒயின் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நம்முடைய பொடுகு தொல்லை நீங்கும்.

கூந்தல் வறட்சி:

நம்மில் பலருக்கு வறண்ட கூந்தல் மற்றும் கூந்தலில் நுனியில் வெடிப்பு ஏற்படும். இதனால் நம்முடைய கூந்தல் வளர்ச்சியானது தடைபடும். இதற்க்கு இந்த பாதாம் எண்ணெய் சிறந்த நிவாரணமாக இருக்கும். எனவே தினமும் சிரித்து நேரம் நம்முடைய தலையில் பாதாம் எண்ணையை தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின் குளித்து வந்தால் நம்முடைய கூந்தலில் உள்ள வெடிப்புகள் மற்றும் வறட்சி தன்மை நீங்கும். மேலும் இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நம்முடைய கூந்தல் பளபளப்பாக இருக்கவும் உதவுகிறது.

சரும பிரச்சனை:

இன்றைய மாசுள்ள சுற்றுசூழலில் நம்முடைய சருமம் அதிக அளவில் பாதிக்க படுகிறது, இதற்க்கு நாம் கடைகளில் விற்கும் காஸ்மெட்டிக் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதால் நமக்கு தேவையிற்ற பக்க விளைவுகள் தான் வரும்.எனவே நாம் இந்த பாதாம் எண்ணையை பயன்படுத்துவதால் நமக்கு இடனாக சரும பிரச்னையில் இருந்து விடுபடலாம்.

வறண்ட சருமம்:

நம்முடைய சருமம் கோடை வெயிலின் காரணமாக வறண்டு காணபடும். இதனை நம்முடைய அழகு போவது போல் நமக்கு இருக்கும். இந்த பாதாம் எண்ணெய் கொண்டு நம்முடைய முகத்தில் மசாஜ் செய்வதால் நமக்கு வறண்ட சருமம் நீங்கி நமக்கு மென்மையான சருமத்தை பெறலாம். இதன் அடர்த்தி மிகவும் குறைவாக இருபதால் வறண்ட சருமமும் இதனை எளிதாக உறிஞ்சி கொள்ளும். எனவே நமக்கு மென்மையான சருமம் கிடைக்கும்.

உதடு வெடிப்பு:

கோடை காலங்களில் நம்முடை உதடுகளில் வெடிப்பு ஏற்படுவது வழக்கம். இதனை நம்முடைய உதட்டின் மென்மை தன்மை போய்விடும்.இதற்கு ஒரே தீர்வு இந்த பாதாம் எண்ணெய் தான். சிறிது பாதாம் எண்ணெயில் 2 சொட்டு தேன் கலந்து அந்த கலவையை நம்முடைய உதட்டில் தடவ வேண்டும்.