தீராத தலை வலியை கூட தீர்த்து வைக்கும் இந்த சுக்கு வைத்தியம்
பொதுவாக உடலில் ஏற்படும் சிறு வியாதிகளுக்கு வீட்டுக்குள்ளேயே கிச்சனில் இருக்கும் பொருட்களை கொண்டு வைத்தியம் பார்க்கலாம் .அப்படி எந்த பொருளை கொண்டு என்ன நோயினை குணப்படுத்தலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிலருக்கு வறட்டு இருமல் பாடாய் படுத்தும் .இந்த வறட்டு இருமலுக்கு கொஞ்சம் எலுமிச்சம் பழசாறு, தேன்
கலந்து குடிக்க வரட்டு இருமல் இருந்த இடம் தெரியாமல் போகும் .
2.சிலருக்கு தலை வலி தீராமல் இருக்கும் .அப்படி பட்டவர்கள் ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு
துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து கொள்ளவும் .பின்னர் இவற்றை ஒன்றாய் சேர்த்து
நன்கு அரைத்து கொள்ளவும் .பின்னர் இந்த கலவையை நெற்றியில் பற்றாகப்
போட்டால் தலைவலி இருந்த இடம் தெரியாமல் குணமாகும்.
3.சிலருக்கு எந்நேரமும் அடிக்கடி விக்கல் வரும் .இந்த விக்கலுக்கு நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து,
தேன் சேர்த்து சாப்பிட்டு வரவும் .இப்படி அடிக்கடி குடித்து வந்தால் தொடர்
விக்கல் தீரும்
4.சிலருக்கு வயிற்று புண் இருந்து கொண்டு எதுவும் சாப்பிட முடியாமல் இருக்கும் அதற்கு வேப்பம் பூ வை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொண்டு வரவும் .இப்படி தொடந்து சாப்பிட்டு வந்தால்
வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.