×

அறுநூறு சர்க்கரை அளவையும் தொன்னூருக்கு கொண்டுவர நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் நீர்

 

கொத்தமல்லியின் (Coriander) இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. சாம்பார், ரசம் போன்ற தமிழர் சமையலில் இதன் விதைகள் பயன்படுகின்றன. கொத்தமல்லி விதையை தனியா என்றும் அழைக்கின்றனர்.

கொத்தமல்லி இலையை தினமும் அளவோடு உணவில் சேர்துக்கொள்வது மிகவும் நல்லது அது நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும். இது நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் (Herbal) தாவரம். வாயு பிரச்சனையை குணமாக்கும்

நாம் அன்றாட சமையலில் கொத்தமல்லியை அனைத்து உணவுகளிலும் சேர்த்து நாம் பயன்படுத்தி வருகிறோம்.

அதன் இலைகள், விதைகள் மற்றும் தூள் பொதுவாக உணவுகளில் சுவையூட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது.

அதேநேரம் இந்த கொத்தமல்லி இதய ஆரோக்கியம், மூளை ஆரோக்கியம், செரிமானத்திற்கு உதவுதல் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது போன்ற ஆரோக்கிய நன்மைகளையும் நமக்கு வழங்குகின்றன.

 

இதனால் தயாரிக்கப்படும் பானத்தை அருந்தினால் உடலுக்கு இன்னும் பல நன்மைகளை தருகின்றது.

குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு.. அந்தவகையில் இந்த அற்புத பானத்தை எப்படி தயாரிக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். 

தயாரிப்பு முறை

கொத்தமல்லி விதையை இடித்து எடுத்துக் கொள்ளவும்.( 25 கிராம்)  ஆறு பங்கு தண்ணீர் சேர்க்கவும் ( 150 மிலி) இரவு முழுவதும் அல்லது 8 மணி நேரம் மூடி வைக்கவும்.

மறுநாள் காலை, வடிகட்டி, சிறிது சர்க்கரையுடன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் சர்க்கரையுடன் 40-50 மில்லி இந்த பானத்தை நீங்கள் சாப்பிடலாம்.

இதை 10 முதல் 30 மி.லி அளவுகளில், தினமும் 2-3 முறை சர்க்கரையுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.

அதிகபட்ச நன்மைகளுக்கு, அதை 6-8 வாரங்களுக்கு எடுத்துக்கொள்ளுங்கள்.

நன்மைகள்

எரியும் உணர்வு, பித்த கோளாறு, அஜீரணம், வயிற்று வலி, காய்ச்சல், புழு தொல்லை ஆகியவற்றிற்கு உதவுகிறது.