குப்புற படுப்போருக்கு என்னென்ன பாதிப்பு வரும் தெரியுமா ?
பொதுவாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தூங்குவதுண்டு .சிலர் மல்லாக்க படுத்து தூங்குவர் .சிலர் குப்புறப்படுத்து தூங்குவர் .இப்படி குப்புற படுத்து தூங்குவதால் உடலில் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும் .அது அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.குப்புற கவிழ்ந்து படுக்கும் போது, நமது தலை தலையணைக்குள் புதைந்துவிடும். அதனால் நாம் தலையை மட்டும் வலது அல்லது இடதுப் பக்கம் திருப்பி படுப்போம்.
2.இப்படி நீண்ட நேரம் படுத்திரு ந்தால், கழுத்துப் பகுதியில் எலும்பு திரும்பியே இருக்கும். இதனால் கழுத்து வலி மற்றும் முதுகெலும்பு சம்மந்தப்பட்ட சில மோசமான பிரச்னைகளும் ஏற்படக்கூடும்.
3.நீண்ட நாட்களாக இப்படி தூங்குபவர் களுக்கு “ஹெர்னியேடட் டிஸ்க்” என்கிற பிரச்னை வரும்.
4.பல பெண்களுக்கு குப்புற படுக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் இப்படி தூங்குவது மார்பு வலியை ஏற்படுத்தும்.
5.குப்புற படுக்கும் போது, மார்பகத்தின் மீது அழுத்தம் ஏற்படுகிறது. இப்படி தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் போது, அது வலியை ஏற்படுத்தும்.
6.எனவே உங்களுக்கு மார்பகத்தில் வலி ஏற்பட்டால், முதலில் உடனே மருத்துவரை அணுகுங்கள். அதோடு இனிமேல் குப்புற படுக்கும் பழக்கத் தைக் கைவிடுங்கள்.
7.முழு இரவும் தலைகுப்புற படுத்துவிட்டு, காலையில் எழுந்து நீங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்தால் ஒரு மாற்றம் தெரியும்.
8.இரவு முழுவதும் தலையணையில் புதைந்துகொண்டு படுத்ததால், தலையணை படிப்பு முகத்தில் தெரியும். 9.நெற்றி படிப்புகளில் பதிந்துவிடும். இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு முகம் வீக்கமடையும்.
10.தொடர்ந்து இப்படி படுத்து தூங்குவதால், மூக்கு மற்றும் நெற்றியின் தோலில் இருக்கும் இழுவை தன்மை மறைந்து சுருக்கங்கள் நிரந்தரமாக தங்கி விடும் வாய்ப்பும் உள்ளது.