கோடையில் சருமம் வறண்டு போகாமல் இருக்க தினமும் இதை செய்யணும் தெரியுமா ?
பொதுவாக குளிர் காலத்தை விட கோடை காலத்தில் நம் தோல் சேதாரமடைகிறது .இந்த பதிவில் நம் சருமத்தை எப்படி இயற்கை முறையில் பொலிவுடன் வைத்து கொள்ளலாம் என்று நாம் காணலாம்
1.சரும பொலிவிற்கு குளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் உலர விடவும்.
2.இதனை நாள்தோறும் செய்து வந்தால் வெயிலில் சருமம் கருப்பாகாமல் இருக்கும்.
3.சிலருக்கு கோடையில் தூக்கம் பாதித்து கண்களில் கருவளையம் உண்டாகும் .இது ஏற்படாமல் தவிர்க்க, விளக்கெண்ணெய்யில் ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி, சிறிது உப்பு ஆகியவற்றைக் கலந்து கண்களைச் சுற்றித் தடவி வந்தால் கருவளையும் காணாமல் போகும்.
4.குளிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு சூடாக்கி அந்த நீரல் குளித்து வந்தால் வேர்வை நாற்றம் குறையும். 5.வெளியில் காயும் அனல் உங்கள் கண்களை பாதிக்காமல் இருக்க வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களுக்கு மேல் வைத்துப் பத்து நிமிடம் அமர்ந்திருங்கள். கண்கள் மெருகேறும்.
6.வாகனத்தில் போகும் போது தலையில் ஸ்கார்ப் அல்லது தொப்பியாவது அணியுங்கள். அடி முடியில் வெயில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
7.இரவில் மீதமிருக்கும் சாதத்தில் ஊற்றி வைத்திருக்கும் நீரைக் கொண்டு காலையில் உங்கள் கூந்தலை அலசுங்கள்.
8.ஒரு ஸ்பூன் தேனும், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் குடித்து வந்தால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.
9.கோடையில் சருமம் எளிதில் வறண்டு போகாமல் இருக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். 10.இப்படி மோர் குடித்து வந்தால் வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவும் புத்துணர்ச்சியும் பெரும்.