இஞ்சி மூலம் நம் தோலை எப்படி பராமரிக்கலாம் தெரியுமா ?
பொதுவாக நம் வீட்டு சமையலில் நாம் இஞ்சியை அதிகம் பயன்படுத்திட வேண்டும் ,இதன் மூலம் பித்தம் ,கபம் வாயு மூன்றையும் கட்டுக்கள் வைக்கலாம் .மேலும் இந்த இஞ்சியை கொண்டு நமது முகத்தையும் அழகாக மாற்றலாம் ,அது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.இஞ்சி அகத்துக்கு மட்டுமல்ல புறத்துக்கும் நன்மை செய்யும் .பெரும்பாலான தோல் பராமரிப்புக்கு இஞ்சி ஒரு சிறந்த மருந்தாகும்.
2.இஞ்சி மூலம் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுத்துக்கொள்ள இதை பயன்படுத்துவார்கள் .
3.இத்தனை சிறப்பு வாய்ந்த இஞ்சி மூலம் முகத்தில் ஏற்படக்கூடிய சருக்கத்தையும், வயதானவர் போன்று தோற்றமளிக்கும் முகத்தையும் மாற்றலாம் .
4.முதலில் இஞ்சியை ஒரு பாத்திரத்தில் துருவி எடுத்துக்கொள்ள வேண்டும்.
5.அதன் பின்பு துருவி எடுத்த துகளை முகத்தில் பூசிக்கொண்டு அரை மணி நேரம் இருக்க வேண்டும் .,
6.பின்னர் அரை மணி நேரத்திற்கு பிறகு வெதுப்பான நீரில் கழுவினால் முகம் மிருதுவாக இருக்கும்.
7.மற்றொரு முறைப்படியும் இஞ்சியை முகத்திற்கு பூசலாம் .அதாவது ஒரு தே.கரண்டி மஞ்சள், ஒரு தே.கரண்டி இஞ்சி பொடி, தேன் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து குழைத்து கொள்வோம்
8.பின்னர் அந்த பேஸ்ட்டை முகத்தில் பூச வேண்டும்.
9.பின் முகம் இறுக ஆரம்பித்தவுடன் தண்ணீரில் அந்த இஞ்சி பேஸ்டை கழுவி விட வேண்டும்