×

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகிவிட்டது என்பதை காமிக்கும் அறிகுறிகள்

 

உலக அளவில் உடலில் அதிக கொலஸ்ட்ரால் சேரும் பிரச்சனை இப்போது மிகவும் பொதுவானதாகிவிட்டது. மேலும், சர்க்கரை நோயாளிகளிடம் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை இன்னும் அதிகமாகக் காணப்படுகிறது. உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பது மிகவும் தீவிரமான ஒரு நிலையாகும். இதனால் பலவித நோய்களும் சங்கடங்களும் நமது உடலை ஆட்கொள்ளக்கூடும். கொலஸ்ட்ராலின் காரணமாக இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும் அபாயம் பன்மடங்கு அதிகரிக்கிறது.

உடலுக்கு அதிக அபாத்தை ஏற்படுத்தும் கொலஸ்ட்ரால் தொடர்பான அறிகுறிகளை அலட்சியம் செய்யக்கூடாது. இதன் அறிகுறிகள் பற்றிய புரிதல் நமக்கு மிக முக்கியமாகும். உடலின் பல்வேறு இடங்களில் கொலஸ்ட்ராலின் அறிகுறிகள் தோன்றுகின்றன. இந்த பதிவில், முகத்தில் தென்படும் கொலஸ்ட்ராலின் அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இந்த அறிகுறிகள் முகத்தில் தோன்றும்:

சூடு கட்டிகள் தோன்றும்:

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், முகத்தில் சூடு அதிகரிக்கிறது. மக்கள் பெரும்பாலும் அதை சாதாரணமாக புறக்கணிக்கிறார்கள். இப்படி செய்வது உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். முகத்தில் சூடு கட்டிகள் வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், கொலஸ்ட்ராலும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.