மன அழுத்தத்தின் காரணமாக உடலில் என்ன பாதிப்பு வரும் தெரியுமா ?
பொதுவாக அதிக ஸ்ட்ரெஸ்ஸால் உடல் மனம் இரண்டையும் பெரிய அளவில் பாதிக்கிறது .இந்த ஸ்ட்ரெஸ் காரணமாக அவர்கள் என்ன பாதிப்பை சந்திக்கின்றனர் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.இன்றைய காலகட்டத்தில் பணிச்சூழல் காரணத்தால் ஸ்ட்ரெஸ் சிலருக்கு ஸ்ட்ரெஸ் இருக்கும் .மேலும் குடும்ப சுமை போன்ற பல காரணங்களாலும் சிலருக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருக்கும்
2.இந்த பரபரப்பான வாழ்க்கை முறை காரணமாக மக்கள் போதுமான அளவு தூக்கமின்றி இருக்கின்றனர் , இதனால் அவர்களின் மன அழுத்தம் கூடிக்கொண்டே போகிறது .
3.இந்த மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை காரணமாக உடல் எடை அதிகரிக்கிறது . மேலும் அதிகமாக உணவு உண்ன வைக்கிறது
4.மேலும் தூக்கமின்மை காரணமாக பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களான லெப்டின் மற்றும் கிரெலின் ஆகியவற்றை சீர்குலைத்து பசியை அதிகம் தூண்டுகிறது .
5.மன அழுத்தத்தின் காரணமாக உடலில் கார்டிசோல் ஹார்மோன் அதிகரித்து ஸ்ட்ரெஸ்ஸை உண்டாக்குகிறது ,
6.இதுபோன்ற ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் உங்கள் பசியையும், உணவின் மீதான ஆர்வத்தையும் அதிகரித்து அதிகம் சாப்பிட வைக்கிறது ,