உணவில் அதிகமாக உப்பு சேர்த்து கொள்வதால் தாக்க காத்திருக்கும் நோய்கள்
பொதுவாக இன்றைய வாழ்வியல் முறையில் நிறைய பேர் ரத்த அழுத்தம் அதிகமாகி அதனால் காலம் முழுவதும் மாத்திரை சாப்பிடுகின்றனர் .இந்த ரத்த அழுத்தம் அதிகமானால் நம் இதயம் முதல் கிட்னி வரை பாதிப்படைகிறது .இந்த ரத்த அழுத்தத்தை எப்படி குறைக்கலாம் என்று இந்த அபதிவில் பார்க்கலாம்
1.மனகவலை, பதற்றம், பயம், படபடப்பு, மன இறுக்கம் போன்றவைகளால் இரத்த அழுத்தம் கூடலாம். 2.உணவில் அதிகமாக உப்பு சேர்த்து கொள்வதால் இரத்த அழுத்தம் கூடுகிறது.
3.இரத்த அழுத்தம் கூடினால் அது தேவையில்லாத பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. .
4.இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்க நாம் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.
5.வயிறு நிறைய உண்பதைத் தவிர்த்து எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவை சாப்பிட வேண்டும்.
6.முதலில் சாப்பிட்ட உணவு செரிமானம் அடைந்த பிறகு அடுத்தவேளை உணவு அருந்துவது நல்லது.
7.நீண்ட பட்டினி கிடந்தாலும் இரத்த அழுத்தத்திற்கு அதிகமாக காரணமாக அமையும்.
8.எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
9.மாமிச வகைகள் புளிப்புப் பண்டங்கள், மசாலாப் பொருட்கள், காபி, டீ, அதிக உப்பு நிறைந்த உணவுகள் தவிர்ப்பது நல்லது ,
10அசைவ உணவுகள், பருப்பு வகைகள், வாயுவைப் பெருக்கும் உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
11.மன அழுத்தத்தை உண்டாக்கும் கோபம், சதா சிந்தனை போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.