×

பப்பாளிக்குள் பதுங்கியுள்ள பக்க விளைவுகள் என்ன தெரியுமா ?

 

பொதுவாக பப்பாளி பழம் நமக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்க கூடியது .ஆனால் இந்த பழம் சிலருக்கு ஒத்து கொள்ளாமல் பல்வேறு பாதிப்புகளை கொடுக்க கூடியது அந்த வகையில் யாருக்கு என்ன கேடு வரும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்  
ஒரு சிலர் மட்டும் இந்த பப்பாளி பழத்தை சாப்பிடவே கூடாது. அப்படி தப்பித்தவறி சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்தாக முடிந்து விடும். அவர்கள் யார் என்று பார்ப்போம் -

1.சிலர் அறுவை சிகிச்சை செய்திருப்பது உண்டு .அவ்வாறு செய்தவர்கள் பப்பாளி பழத்தை அதிகளவில் சாப்பிட்டுவிட்டால், அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட காயத்தை ஆற விடாமல் இந்த பழம் செய்து விடும். 
2. சிலர் இதய நோயாளிகளாக இருப்பர் .அந்த நோயாளிகள்  அதிக அளவு பப்பாளி பழத்தை சாப்பிட்டால், அது உயிருக்கே ஆபத்தாக முடியும் .
3.சிலர் பப்பாளியை அதிகமாக சாப்பிட்டால் அதில் உள்ள பப்பேன் என்ற நொதி ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். 
4.இதனால், ஒரு சிலருக்கு ஆஸ்துமா, மூச்சு திணறல் போன்ற சுவாரப் பிரச்சினைகள் ஏற்பட்டு ஆரோக்கியத்தை கெடுத்து விடும் .
5.பொதுவாக கர்ப்பிணி பெண்கள் பப்பாளி சாப்பிடக்கூடாது. அப்படி அதிகமாக சாப்பிட்டால் அது கருவுறுதலை பாதிக்கும் என்று நம் முன்னோர் கூறியுள்ளனர் . 
6.இந்த கர்ப்பிணிகள் தெரியாமல் பப்பாளி அதிகமாக சாப்பிட்டுவிட்டால், சவ்வுகளை சேதப்படுத்தி கருக்கலைப்பை ஏற்படுத்திவிடும் என்று நம்பப்படுகிறது 
7.ஒரு சிலர் அதிகமாக பப்பாளியை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்தில் அழுத்தம் கொடுத்துவிடும். 
8.அதிகமாக பப்பாளியை சாப்பிடுவதன் மூலம் தொண்டை வீக்கம், சளி, காய்ச்சல், தலைவலி போன்ற பக்கவிளைவுகளை ஒரு சிலருக்கு ஏற்படுத்தும்.