×

மணிக்கணக்கில் ஜிம்மில் இருப்போருக்கு  காத்திருக்கும் அதிர்ச்சி. 

 
இன்றைய கால கட்டத்தில் பல ஆண்கள் மணிக்கணக்கில் ஜிம்மிற்கு சென்று பயிற்சியில் ஈடுபடுகின்றனர் .இப்படி பயிற்சியில் ஈடுபடுவது அவர்களுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் இதனால் என்னென்ன பக்க விளைவுகள் உண்டாகும் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 
1.தங்களை கவர்ச்சிகரமானவராக காட்டிக்கொள்வதற்கு சில ஆண்கள் பல மணி நேரம் ஜிம்முக்கு  செல்கின்றனர் 
2.இப்படி மணிக்கணக்கில் ஜிம்மில் இருப்பது அவர்களது குழந்தை பெற்றுக்கொள்ளும் திறனை பாதிப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
3.சில ஆண்கள் அழகான உடற்கட்டை பெற , அல்லது தலைமுடிஉதிர்வை தடுக்க  சில மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர்  
4.இந்த மருந்து மாத்திரைகளும் அவர்களது ஆண்மையை பாதிக்கும் என்று தெரியவந்துள்ளது
5.மேலும் தம்பதிகளிடையேயான உறவில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் இது.
6.இந்த மருந்துகள் கருத்தரிப்பதை கடினமாக்குகிறது 
7.“தங்களது ஆண்மையை பரிசோதிக்க மருத்துவமனைக்கு வரும் ஆண்களில் பலர் உடற்கட்டில் ஆர்வமிக்கவர்களாக இருப்பதை நான் பார்த்துள்ளேன்” என்று கூறுகிறார் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர் 
8.“தங்களை கவர்ச்சிகரமானவராக காட்டிக்கொள்ள நினைக்கும் ஆண்கள் அதற்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் அவர்களை மலட்டுத்தன்மை உடையவர்களாக ஆக்குகிறது.”என்கிறார் அந்த மருத்துவர் 
9.உடற்கட்டை பெறுவதற்கு மருந்துகளை உட்கொண்டு ஹார்மோன்களை தூண்ட செய்து தசைகளின் வளர்ச்சியை அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணமென்று தெரியவந்துள்ளது.