×

அதிகளவில் முட்டை உண்பதால் எந்த  நோய் உருவாகும் அபாயம் உள்ளது தெரியுமா ?

 

பொதுவாக கோழி முட்டைகள் தினமும் உண்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. ஏனெனில் 
முட்டைகளில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின் பி போன்றவைகள் உள்ளன.இருந்தாலும் ஆரோக்கியம் மிகுந்த முட்டையை அதிகம் உண்பதால் நம் உடலுக்கு உண்டாகும் தீமைகள் குறித்து இந்த பதிவில் பாக்கலாம் 
1.பொதுவாக கோழி முட்டையில் வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளது, இது நமது  மூளையின் செயல்பாட்டை சிறப்பாக செயலாற்ற வைக்கிறது 
2.மேலும் கோழி முட்டையில் உள்ள புரோட்டீன்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உடலின் தசைகளை சரிசெய்து நன்றாக செயல் பட வைக்கிறது .
3.மேலும் கோழி முட்டையில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் டி உள்ளது,
4. மேலும் கோழி முட்டை எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. 
5.மேலும் கோழி முட்டைகள் பசியைக் குறைக்க உதவும், இது எடை கட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கிறது.
6.அது மட்டுமல்லாமல் முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கும் கொலஸ்ட்ரால் நேரடியாக கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்கிறது.எனவே அதிக கொலஸ்ட்ரால் உள்ள நோயாளிகள் தவறுதலாக கூட முட்டை சாப்பிடக்கூடாது.
7.ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முட்டைகளை சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் 8.மற்றும் அதிக முட்டைகள் உண்பது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
9.முட்டையில் புரதம் உள்ளதால், அதிகளவு முட்டை உண்பதால் அதிகப்படியான புரதம் உடல் எடையை அதிகரிக்கும்.
10.அதிகளவில் முட்டை உண்பதால் நீரிழிவு நோய் உருவாகும் அபாயம் உண்டாக வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் ,குறைவாக முட்டையை எடுத்து கொள்வது நலம்