பிஸ்கட்டுகள் அதிகம் சாப்பிடுவதால் என்னென்ன பாதிப்பு வரும் தெரியுமா ?
பொதுவாக நாம் பசியெடுத்தால் உடனே இரண்டு பிஸ்கட்டுகள் எடுத்து சாப்பிடுவோம் .குழந்தைகளும் பசி எடுத்து அழுதால் உடனே பிஸ்கட்டுகள் கொடுப்போம் .இது மிக தவறு .இந்த பிஸ்கட் சாப்பிடுவதால் நமக்கு என்ன பாதிப்பு உண்டாகும் என்று இந்த ப்பதிவில் பார்க்கலாம்
1.குழந்தைகள் நிறைய பிஸ்கட்டுகளை ஒரே நேரத்தில் சாப்பிடும் போது அவர்களுக்கு பசியின்மை ஏற்படுகிறது.
2.கிரீம் பிஸ்கட்டுகள் முழுக்க முழுக்க ரசாயனங்களால் ஆனதால் பாதிப்பு அதிகம்
3 .இந்த கிரீம் பிஸ்கட்டுகள் எல்லாருடைய உடம்பிலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது.
4.உப்பு சேர்க்கப்படும் பிஸ்கட்டுகளில் இருக்கும் சோடியம் கார்பனேட், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
5.சிலர் தொடர்ந்து அளவுக்கு அதிகமான உப்பு சுவைகொண்ட பிஸ்கட்டுகள் சாப்பிடுவர் .இது குழந்தைகளுக்கு சிறுநீரகப் பிரச்னை உண்டாக்கும் .
6.பிஸ்கட்டுகள் மூலம் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
7.சிலர் குழந்தைக்கு ஒரு டம்ளர் பாலுடன் இரண்டு பிஸ்கட்டுகள் சாப்பிட கொடுப்பர் .இது , உடலில் கொழுப்புச்சத்து அதிகரித்து விட செய்யும்
8.பிஸ்கட்டுகள் அதிகம் சாப்பிடுவதால் குழந்தைகள் மந்தநிலையுடன் செயல்பட ஆரம்பிப்பார்கள். 9.பிஸ்கட்டுகள் அதிகம் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகளும் ஏற்படலாம்.
9., சுகர் ஃப்ரீ பிஸ்கட்டுகளால் , உடலில் உள்ள மெட்டபாலிசத்தின் அளவு குறையும் ,
10.சுகர் ஃப்ரீ பிஸ்கட்டுகளால் கல்லீரல் சார்ந்த பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.