உடல் எடை குறைய சீரகத்தை இப்படி சாப்பிடுங்க போதும்
பொதுவாக சீரகம் நம் குடல் செரிமானத்துக்கு உதவும் .மேலும் திராட்சையுடன் சீரகம் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் சீராகும் .மேலும் சிலருக்கு சுகர் அளவை கட்டுக்குள் கொண்டு வரும் .மேலும் சீரகத்தினை எப்படி பயன் படுத்தினால் என்ன நன்மைகளை அடையலாம் என்று பாக்கலாம்
1.முதலில் 2 டேபிள் ஸ்பூன் ஜீரகத்தை ஒரு கப்பில் எடுத்து கொள்ளுங்கள்.
2.அதை ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வையுங்கள் .
3.இந்த இரவு முழுவதும் ஊறிய ஜீரக தண்ணீரை அப்படியே ஒரு பாத்திரத்தில்
ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள்.
4.அந்த சீரக தண்ணீர் நன்றாக கொதிக்க விடுங்கள்
பிறகு அது கொதித்த பிறகு இதை எடுத்து ஆறவைத்து விடுங்கள் .பின்னர் அதனுடன்
பாதி எலுமிச்சை சாறை பிழிந்து விட்டு நன்றாக கலக்கி குடித்து வரவும்
5.இதை தினமும் காலையில் 15 நாள்களுக்கு குடித்து வர உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்
6.அடுத்து கொஞ்சம் தயிர் எடுத்து கொள்ளவும் .அதில் 1 டேபிள் ஸ்பூன்
ஜீரக பொடியை கலந்து அதை சாப்பிட்டு வரவும் ,சில நாள் தொடர்ந்து சாப்பிட்ட பின்னர் உடல் எடையில்
நல்ல மாற்றம் தெரியும்.
7.ஒரு டேபிள் ஸ்பூன் ஜீரகப்பொடியை எடுத்து
ஒரு கப் நீரில் இட்டு விடுங்கள் .இதனுடன் தேன் கலந்து குடிக்க கொழுப்பு கரையும்