×

உப்பு விஷயத்தில் எப்படியிருந்தா எந்த  நோயிடமிருந்து தப்பலாம்னு தெரிஞ்சிக்கோங்க

 

... 

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று ஒரு பழமொழியுண்டு .மனிதனின் உடலுக்கு உப்பு அவசியமென்றாலும் அது அளவுக்கு மிஞ்சினால் ஆபத்தில் தான் முடியும் .ஆம் உப்பு உடலில் அதிகமானால் அது ரத்த அழுத்தம் முதல் பல்வறு நோய்களுக்கு வழி விடும் 


மனித உடலில்  உப்பின் அளவு அதிகரிக்கும் போது இரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கிறது.இதனால் பல பாதிப்புகள் உண்டாகிறது 
ஆரோக்கியமான ஒரு மனிதனுக்கு தினமும் 2. 3 கிராம் அளவு உப்பு போதுமானது என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள் . ஆனால், நோயாளிகள், உடல் நல பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்து அளவை முடிவு செய்ய வேண்டும்.இருந்தாலும் நாம் அந்த குறிப்பிட்ட அளவை விட அதிகமாகத்தன் நுகர்கிறோம் 
உடலில் உப்பு கூடும் போது ,உடலில் கால்சியம் இயல்பாகவே குறையும், என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அதிக அளவு உப்பு கால்ஷியத்தை உரிஞ்சி விடும். இதனால் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்பட்டு எலும்புகளில் பலவீனம் ஏற்படலாம் .அதனால் உப்பு விஷயத்தில் தப்பு செய்யாமல் அளவோடு சாப்பிட்டு வளமோடு வாழுவோம்