×

ஒற்றைத்தலைவலி உண்டாக என்ன காரணம் தெரியுமா ?

 

பொதுவாக மைக்ரேன் எனும் ஒற்றைத்தலைவலியானது வெடீர் வெடீர் என்று சுத்தியலைக்கொண்டு தலையில் அடித்தாற் போன்ற வலியை ஏற்படுத்தும் .இந்த ஒற்றைத்தலைவலியில்  
ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1., உணவுகளை அதன் முறையான இடைவெளியில் உண்ணாமல் காலம் தாழ்த்தி உண்பது அல்லது பட்டினி கிடப்பது ஒற்றைத்தலைவலி ஏற்பட காரணங்களில் ஒன்று 
2.தூக்கமின்மை அல்லது பொழுதன்னைக்கும் தூங்குவது இரண்டுமே ஒற்றைத்தலைவலி ஏற்பட காரணங்களில் ஒன்று
3.பெண்களுக்கு மாதவிடாய் கால ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் கருத்தடை மாத்திரை உட்கொள்ளல் ஒற்றைத்தலைவலி ஏற்பட காரணங்களில் ஒன்று 
4.மலைவாசஸ்தலங்களுக்கு செல்வது அல்லது உயரமான இடங்களில் இருந்து கீழே வருவது ஒற்றைத்தலைவலி ஏற்பட காரணங்களில் ஒன்று 
5.இனிப்பு சுவை கொண்ட பொருள்களை உண்பது ஒற்றைத்தலைவலி ஏற்பட காரணங்களில் ஒன்று 
6.பீட்ரூட், முள்ளங்கி, ஸ்பினாச் கீரை , செலரி போன்ற நைட்ரேட் அடங்கி உணவுகள் கூட ஒற்றைத்தலைவலி ஏற்பட காரணங்களில் ஒன்று 
7.சிலருக்கு சிவப்பு மாமிசமும் கடல் உணவுகளும் ஒற்றைத்தலைவலியை உண்டாக்கலாம்