போதை மாத்திரைகளை விட மோசமான பாதிப்பை தரும் வலி நிவாரணி மாத்திரைகள்
வலி நிவாரணி மருந்துகள் இந்தியாவில் கண்மூடித்தனமாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றின் நீண்ட கால பயன்பாடு உயிருக்கே ஆபத்தாகலாம்.
பாராசிட்டமால், இபுப்ரோஃபென் போன்றவற்றை உட்கொள்பவர்களைவிடவும், டைப்ளோஃபெனக் உட்கொள்பவர்களுக்கு முப்பது நாள்களிலேயே இதயத்துடிப்பு சீரற்று இருப்பது (Arrhythmia), பக்கவாதம் (Ischemic Stroke), மாரடைப்பு, இதய செயலிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறதாம். ஏற்கெனவே சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பு பிரச்னை இருப்பவர்களுக்கு, இதயப் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகமிக அதிகம் என்கிறது ஆய்வு. ஆகவே, வலி நிவாரணிக்கான மாத்திரை உட்கொள்பவர்கள், இனி உங்கள் பெர்சனல் மருத்துவரிடம் ஆலோசித்தபின்னர் அதை உபயோகப்படுத்தவும்!
இன்றைய பதட்டமான வாழ்க்கை, கால ஓட்டம், பிஸியான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு போன்றவற்றால் மக்கள் அடிக்கடி டென்ஷன் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அதை போக்க, வலி நிவாரணிகளை பயன்படுத்துகின்றனர்.
அத்தகைய மருந்துகளை உட்கொள்வதன் மூலம் அவர்கள் உடனடி பலனைப் பெற்றாலும், நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது இவை மிகவும் ஆபத்தானவை.
வலி நிவாரணி மருந்துகள் மருத்துவ மொழியில் அனால்ஜசிக் என்று அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் இவை கண்மூடித்தனமாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றின் நீண்ட கால பயன்பாடு உயிருக்கே ஆபத்தாகலாம்.
வலி நிவாரணி பழக்கம் கொடியத
டைக்லோஃபெனாக் என்பது ஒரு பாரம்பரிய ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்து ஆகும். இது வலி மற்றும் வீக்க சிகிச்சைக்காக உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. டைளோஃபெனாக் பயன்படுத்தும் நபர்களுக்கு இருதய நோய் அபாயம் ஏற்படுவதை மற்ற NSAID மருந்துகள் மற்றும் பாராசிட்டமால் பயன்படுத்துபவர்களுடன் இந்த ஆராய்ச்சி ஒப்பிட்டுள்ளது.