என்னது !இந்த பத்து ரூபாய் மீன் , பத்து விதமான நோயிலிருந்து காக்குமா ?
மீன் உண்ணும் பழக்கமானது எலும்புத்தேய்வு, சொறி சிரங்கு மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை குறைவதால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றை குறைப்பதற்கு வழி வகை செய்கிறது.
மீன் என்பது சிறியவர்கள் வரை பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு மிகச்சுவையான உணவாகும். அதிலும் பிரஷ் ஆன மீனில் உள்ள சுவை என்பது வேறு எதிலும் கிடைக்காது. மீன் என்று வரும் பொழுது உங்களுக்கு இன்னொரு சந்தேகமும் வரும்... எந்த மீனில் அதிக சத்துக்கள் உள்ளது... எந்த மீன் உடலுக்கு மிகவும் நல்லது என்ற சந்தேகம் தான் அது...!
மீன்களில் மிகவும் குறைவான விலையில் கிடைப்பது பாறை மீன் .. இதன் விலை குறைவு என்பதற்காக இதன் சுவையில் குறைவு இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள்.. இது சுவையில் அலாதியானது ஆகும்...! இந்த பகுதியில் பாறை மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றியும் தரமான மீனை எப்படி தேர்ந்தெடுத்து வாங்குவது என்பது பற்றியும் காணலாம்.
இதய ஆரோக்கியம்
பாறை மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.
பாறை மீனின் நன்மைகள்
பாறை மீனில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு வைட்டமின்கள், தாதுக்கள், அதிகம் நிறைந்துள்ளது.
எடுத்துக்காட்டாக 100 கிராம் பாறை மீனில் புரதச்சத்து 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும்,சாம்பல் சத்து 1.9,நீர்ச் சத்து 66.70 கிராமும் உள்ளது.
பாறை மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளதால் ட்ரைகிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைத்துவிடுகிறது.
தோல் நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள் வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமாவந்தால் முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பைக் குறைத்து விடுகிறது.
வைட்டமின் டி ஊட்டச்சத்து
பாறை மீனில் வைட்டமின் டி என்ற உயிர்ச்சத்து நிறைந்துள்ளது, இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது, பாறை மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.
நீரிழிவு நோய்க்கு
நீரிழிவு நோய் உள்ளவர்கள் பாறை மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.
பாறை மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது மேலும் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது.
பாறை மீனில் வைட்டமின் b12 உள்ளது இது உடலில் கொலஸ்ட்ராலின் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்களில் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது.
கால்சியம் மருந்துகள் தயாரிக்க
பாறை மீனில் அயோடின் என்ற தாதுச்சத்து உள்ளதால் முன்கழுத்துக்கழலை நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. பாறை மீன்களில் இருந்து கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது.
இந்த மாத்திரைகளை உட்கொள்பவர்கள் தோல்கள் பளிச்சென்றும், நகங்கள் உறுதியாகவும், கண் பார்வை தெளிவாக இருக்கும், என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
உடல் எடை குறைய
பாறை மீனில் கலோரிகள் குறைவாகவும் மற்றும் புரோட்டீன் அதிகமாக இருப்பதால் இது உடல் எடையை குறைப்பதற்கு அதிகமாகவே உதவிசெய்கிறது.
கண்கள் ஆரோக்கியத்திற்கு
பாறை மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முக்கியமான ஊட்டச்சத்து வைட்டமின் ஏ அதிகமாக நிறைந்துள்ளது, எனவே இவற்றை குறைந்தது வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் சார்ந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
வளர்சிதை மாற்றத்திற்கு
செல்லுலார் மற்றும் இணைப்புத் திசுக்களின் வளர்ச்சிக்கு இந்த திசுக்களில் உள்ள கோளாறுகளை சரி செய்ய தேவையான அளவு புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ளது.