×

மதியம் குட்டித் தூக்கம் நல்லதா… கெட்டதா?

பகல் நேரத்தில் மதிய உணவுக்குப் பிறகு குட்டித் தூக்கம் என்பது பலருக்கு விருப்பமான ஒன்று. குழந்தைகள் அழகாக மதியம் தூங்கிவிடுவார்கள். பெரியவர்களால் அப்படி தூங்க முடிவது இல்லை. அலுவலக வேலை, வீட்டு வேலை என ஏதாவது ஒன்றைக் காரணம் காட்டி தூக்கத்தைத் தடுத்துவிடுகின்றனர். இயற்கையாகவே மதியம் உணவு உண்ட பிறகு ஒரு சோர்வு, தூங்க வேண்டும் என்ற உணர்வு அனைவருக்கும் இருக்கும். இரவில் எட்டு மணி நேரம் தூங்கியிருந்தாலும் மதியம் குட்டித் தூக்கம் போடுவது மனதையும் உடலையும்
 

பகல் நேரத்தில் மதிய உணவுக்குப் பிறகு குட்டித் தூக்கம் என்பது பலருக்கு விருப்பமான ஒன்று. குழந்தைகள் அழகாக மதியம் தூங்கிவிடுவார்கள். பெரியவர்களால் அப்படி தூங்க முடிவது இல்லை. அலுவலக வேலை, வீட்டு வேலை என ஏதாவது ஒன்றைக் காரணம் காட்டி தூக்கத்தைத் தடுத்துவிடுகின்றனர். இயற்கையாகவே மதியம் உணவு உண்ட பிறகு ஒரு சோர்வு, தூங்க வேண்டும் என்ற உணர்வு அனைவருக்கும் இருக்கும். இரவில் எட்டு மணி நேரம் தூங்கியிருந்தாலும் மதியம் குட்டித் தூக்கம் போடுவது மனதையும் உடலையும் புத்துணர்வு அடையச் செய்யும் என்கின்றனர் மருத்துவர்கள்.

மதியம் குறைந்தது ஒரு 20 நிமிடத்துக்குத் தூங்குவது காலையில் நீண்ட நேரம் தூங்குவதால் கிடைக்கும் ஓய்வை விட அதிக ஓய்வைக் கொடுக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. நம்முடைய உடல் இந்த 20 நிமிட தூக்கத்துக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொருவரும் குறைந்தது 20 நிமிட தூக்கத்தை முயலலாம் என்கின்றனர்.

அதற்காக 20 நிமிடங்கள் தூங்கினால் போதுமான என்று நினைக்க வேண்டாம். தூங்க வாய்ப்பே இல்லை என்பவர்கள் மதிய உணவுக்குப் பிறகு மதிய உணவு இடைவேளை நேரத்தில் 20 நிமிடங்கள் தூங்கலாம். மற்றவர்கள் ஒரு மணி நேரம் வரை தூங்குவது பரிந்துரைக்கப்படுகிறது.

மதிய நேரத்தில் மேற்கொண்ட சிறிய தூக்கம், அடுத்த மணி நேரங்களை அதிக விழிப்பு மிக்கதாக மாற்றுகிறது. தூங்கி விழித்ததின் காரணமாக தூங்க வேண்டும் என்ற உணர்வு மறைகிறது. மனமும் உடலும் அமைதி அடைகிறது. சோர்வு நீங்குகிறது. விழிப்புணர்வு, கற்றல் திறன் அதிகரிக்கிறது. நினைவாற்றல் அதிகரிக்கிறது. மனநிலையை சந்தோஷமானதாக மாற்றுகிறது. வேலை செயல் திறன் அதிகரிக்கிறது.

மதிய தூக்கத்தைப் பிற்பகல் 3 மணிக்கு முன்னதாக முடித்துவிடுவது நல்லது. அப்படி இல்லை என்றால் அது இரவு தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

மதிய குட்டித் தூக்கம் எல்லோருக்கும் நல்லதா என்றால் இல்லை. வயதானவர்கள், தூக்கமின்மையால் அவதியுறுபவர்கள் மதிய தூக்கத்தை முயல வேண்டாம்.