×

பொடுகு தொல்லைக்கும்,முடி கொட்டுதலை தவிர்க்கவும்  ஒரு  எண்ணெய் தயாரிக்கும் முறை 

 

பொதுவாக இன்று பலருக்கும் முடி கொட்டுதல் பெரிய பிரச்சினையாக உள்ளது .மேலும் இதற்கு பொடுகு பிரச்சினை மற்றும் உடலில் சத்து குறைவு ஒரு காரணமாக கூறப்படுகிறது .இந்த பொடுகு தொல்லை உள்ளவர்களுக்கும்,முடி கொட்டுதலை தவிர்க்கவும்  ஒரு  எண்ணெய் தயாரிக்கும் முறை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்   

1.ஒரு பெரிய இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு காயவிடவும்.
2.பின் அதில் கறிவேப்பிலை, வேப்பிலை, மருதாணி இலை சேர்க்கவும்  .
3.பின்னர் அவற்றுடன் கரிசலாங்கண்ணி, இடித்த வெங்காயம், இடித்த நெல்லிக்காய் சேர்க்க வேண்டும்.
4.அதன் பின் இதில் கற்றாலையை நன்றாக கழுவி சேர்க்க வேண்டும்.
5.பின்னர் மேற்கூறிய கலவையுடன்  வெந்தயம், கருஞ்சீரகம், வெட்டி வேர் போன்றவர்றை மிதமான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
6.அடுத்து மேலே கூறிய கலவையில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் நன்றாக நிறம் மாறி வரும் வரை அதனை காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
7.பின்னர் அந்த மூலிகை கலவையை ஒருநாள் முழுவதும் அதே பாத்திரத்தில் வைக்க வேண்டும். 
8.பின் அதனை வடிகட்டி அதனை தேவையான டப்பாக்களில் வைத்து பயன்படுத்தலாம்.
9.முடி வளர்ச்சிக்கு உதவும் இந்த எண்ணெய் இரண்டு, மூன்று மாதங்கள் இருந்தாலும் இந்த எண்ணெய் கெட்டுப்போகாது. 
10.இந்த ஆரோக்கியமான எண்ணெய் முடிகொட்டுதலை நிறுத்தி முடி அடர்த்தி அதிகமாக்க்கும் ஆற்றல் கொண்டது ,