×

ஓட்ஸுக்குள் ஒளிந்திருக்கும் உடலுக்கு தேவையான ஓராயிரம்  நன்மைகள்

 

உலகில் பெரும்பாலான மனிதர்கள் உண்ணும் முக்கிய உணவுகள் அரிசி அல்லது கோதுமை தானியங்களில் இருந்து செய்யப்பட்டதாகவே இருக்கிறது. வேறு பல வகையான உணவு தானியங்களும் உடலுக்கு தேவையான பல சத்துகளை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. அதில் ஒன்று தான் மேற்கத்திய நாடுகளில் அதிகம் பிரபலமான “ஓட்ஸ்”. இந்த ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம். இதய நோயாளிகள் மாரடைப்பு ஏற்பட்டு மீண்டவர்கள், இதயம் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளை அறவே தவிர்ப்பதோடு, இதயத்தை பலப்படுத்தும் உணவுகளை சாப்பிட வேண்டும். ஓட்ஸில் பீட்டா குலுக்கன் என்கிற பொருள் நிறைந்திருக்கிறது இது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தி இதயத்திற்கு சீரான ரத்த ஓட்டம் செல்வதை உறுதி செய்கிறது. இதய தசைகளை வலுப்படுத்துகிறது.

காலை உணவாக  உண்ணப்படும் இந்த தானியமானது ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. ஓட்ஸில் உள்ள முக்கிய உணவு நார்ச்சத்தான பீட்டா-குளுக்கன் (Beta glucan)  இதய நோய், சர்க்கரை நோய், உடல் பருமன் மற்றும் புற்றுநோய் போன்ற பல ஆபத்தான நிலைமைகளைத் தவிர்க்க உதவுகின்றன.மேலும் அவை உங்கள் தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.

ஓட்ஸில் உள்ள ஊட்டசத்துக்கள்

ஓட்ஸில்  ஃபோலேட், துத்தநாகம், இரும்பு, தாமிரம், பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 ஆகியவை நிறைந்துள்ளன.100 கிராம் ஒட்ஸில் 389 கலோரிகள் உள்ளது. உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு  ஓட்ஸ் உங்களுக்கு சரியான உணவாகும். ஓட்ஸ் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போம் !....

கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்

அதிக கொலஸ்ட்ரால் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாகும். ஓட்ஸ் சாப்பிடுவது உங்கள் உடலின் கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது. ஓட்ஸில் பீட்டா-குளுக்கன் என்ற நார்ச்சத்து நிறைந்துள்ளது. இந்த நார்ச்சத்து உங்கள் கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது.  ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள  ஓட்ஸ் சாப்பிடுவது இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

உங்கள் இரத்த சர்க்கரையை பராமரிக்கிறது

குறைந்த கிளைசெமிக் குறியீடு இருப்பதால், ஓட்ஸ் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மெதுவாக ஜீரணமாகும். மெதுவான செரிமானம் சர்க்கரையை அதிகரிக்காது மற்றும் உங்கள் இரத்த சர்க்கரை அளவை  பராமரிக்க உதவும் .

உடல் எடையை குறைக்க உதவுகிறது

நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் ஓட்ஸ் உங்களுக்கு சிறந்த நண்பர். ஓட்ஸில். பீட்டா குளுக்கான் (Beta glucan) நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது எடை இழப்புக்கு சிறந்த உணவாக அமைகிறது. ஓட்ஸ்  நீண்ட நேரம் பசியில்லாமல் உங்களை முழுதாக வைத்திருக்கும்.இது நீங்கள் கூடுதல் உணவை சாப்பிடுவதிலிருந்து உங்களைத் தடுக்கின்றன. மேலும், ஓட்ஸ்  வயிற்று கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. .ஒட்ஸுடன் உடற்பயிற்சி  உங்கள் உடை எடையை குறைக்க உதவும் . 

உங்கள் ஆற்றலை அதிகரிக்கிறது

ஒரு நாள் சுறுசுறுப்பாக இருக்க உங்களுக்கு நிறைய ஆற்றல் தேவை. ஓட்ஸில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன, இது உங்களுக்கு அதிக ஆற்றலை அளிக்கிறது. ஓட்ஸ் ஜீரணிக்க நேரம் எடுக்கும், மேலும் இது நீண்ட நேரம் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் தருகிறது

ஓட்ஸ் சாப்பிடுவது உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது. தொடர்ந்து ஓட்ஸ் சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, பெருங்குடல் புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்கிறது.

உங்கள் தூக்க முறையை மேம்படுத்துகிறது

ஓட்ஸில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன, இது உடலில் மெலடோனின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இந்த மெலடோனின் என்ற வேதிப்பொருள் உங்களுக்கு நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது. நீங்கள் ஒரு கிண்ண ஓட்ஸை தேனுடன் சாப்பிடலாம், அது உங்களுக்கு உறக்க நேர உணவாக அமையும். இது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது மேலும் இது உங்களுக்கு நல்ல தூக்கத்தை பெற உதவுகிறது.