×

ஈஸி டூ குக்: சின்னஞ்சிறு எள் உருண்டையில் இவ்வளவு சத்துக்களா?

உணவுக்கு நோ சொல்லும் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும் உணவு ஸ்நாக்ஸ். உடல் நலத்துக்கு கேடு என்று தெரிந்தும் கூட வேறு வழியின்றி காற்று நிரப்பப்பட்ட பாக்கெட் ஸ்நாக்ஸ்களை வாங்கிக் கொடுக்கின்றனர். இதையாவது சாப்பிடுகிறார்களே என்று அவர்கள் மனதைத் தேற்றிக்கொள்கின்றனர். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஹெல்த்தி ஸ்நாக்ஸ் தயாரிக்கும் முறை பற்றிப் பார்ப்போம். எள் உருண்டை: தேவையானவை: எள், நாட்டுச் சர்க்கரை – தலா 1/2 கிலோ. பச்சரிசி 50 கிராம். விருப்பப்படுபவர்கள் ஏலக்காய் ஒன்று, இரண்டு
 

உணவுக்கு நோ சொல்லும் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும் உணவு ஸ்நாக்ஸ். உடல் நலத்துக்கு கேடு என்று தெரிந்தும் கூட வேறு வழியின்றி காற்று நிரப்பப்பட்ட பாக்கெட் ஸ்நாக்ஸ்களை வாங்கிக் கொடுக்கின்றனர். இதையாவது சாப்பிடுகிறார்களே என்று அவர்கள் மனதைத் தேற்றிக்கொள்கின்றனர்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஹெல்த்தி ஸ்நாக்ஸ் தயாரிக்கும் முறை பற்றிப் பார்ப்போம்.

எள் உருண்டை:

தேவையானவை: எள், நாட்டுச் சர்க்கரை – தலா 1/2 கிலோ. பச்சரிசி 50 கிராம். விருப்பப்படுபவர்கள் ஏலக்காய் ஒன்று, இரண்டு சேர்த்துக்கொள்ளலாம்.

செய்முறை: பச்சரிசியை மிக்ஸியில் அரைத்து சலித்து வைத்துக்கொள்ள வேண்டும். எள்ளை தண்ணீரில் ஊறவைத்து, இடித்து வெயிலில் உலர வைக்க வேண்டும்.

மிக்ஸியில் எள், நாட்டு சர்க்கரை அல்லது வெள்ளம், பச்சரிசி, ஏலக்காயைப் போட்டு நன்கு அரைக்க வேண்டும். உரல் இருந்தால் அதில் இட்டு இடிக்கலாம். இந்த கலவை நன்கு அரைந்ததும், அதை உருண்டை பிடித்து வைக்கலாம்.

இதைச் சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் சாப்பிடலாம்.

பலன்கள்: எள்ளில் கால்சியம் அதிக அளவில் உள்ளது. 30 கிராம் கால்சியத்தில் ஒரு நாளைக்குத் தேவையான கால்சியத்தில் 22 சதவிகிதமும், மக்னீஷியத்தில் 25 சதவிகிதமும், மாங்கனீசில் 32 சதவிகிதமும், துத்தநாகம் 21 சதவிகிதமும் உள்ளது.

வெள்ளத்தில் இரும்புச்சத்து உள்ளிட்டவை அதிகம் உள்ளது. எனவே, இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை பிரச்னை வராது. உடல் உறுதியாகும். 30 கிராம் எள்ளில் 5 கிராம் அளவுக்கு புரதச்சத்து உள்ளது. இது தசைகள் வலுப்பெற உதவும்.

பெரியவர்கள் இதைச் சாப்பிட்டு வரும் போது அவர்கள் ரத்தத்தில் கொழுப்பு அளவு குறையும். இதனால் இதய நோய் உள்ளிட்ட பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு குறையும்.

அதிக அளவில் கால்ஷியம் உள்ளதால் எலும்புகள் வலுப்படும். துத்தநாகம், தாமிரம், இரும்பு, வைட்டமின் பி6, இ ஆகியவை அதிக அளவில் இருப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தி வலுப்பெறும்.