×

கை கால்கள் மரத்து போவது எதனால் தெரியுமா ?

 
பொதுவாக எப்போதாவது கை கால் மரத்துப்போனால் அதை சாதாரணமாக எடுத்து கொள்ளலாம் .ஆனால் அதுவே அடிக்கடி இப்படி மரத்து போனால் அது மதுப்பழக்கம் மற்றும் விட்டமின் பி 12 குறைபாடு காரணமாக இருக்கலாம் .எனவே அந்த விட்டமின் மாத்திரைகளை எடுத்து கொள்ளலாம் .மேலும் இந்த கை கால் மரத்து போவது வேறு என்ன காரணம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 
1.உடல் உறுப்புகள் மரத்துப்போவதென்பது நீரிழிவு, தைராய்டு  போன்ற பலவித நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம். 
2.வைட்டமின் பி12 குறைபாடு காரணமாகவும் மரத்துப்போதல் உண்டாகலாம். 
3. உடல் எடை அதிகரித்து  உடலில் அதிகளவு கொழுப்புகள் சேர்ந்தாலும் மரத்து போகும் பிரச்சனை ஏற்படுகிறது. 
4. வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்கள் மீன், கறி போன்ற அசைவ உணவு வகைகளை நிறைய சாப்பிட வேண்டும். 
5.இரு பக்கமும் உடல் மரத்துப்போவதற்கு நீரிழிவு ஒரு முக்கியமான காரணம் என்கின்றனர். 
6.கை, கால்களை தவிர்த்து சிலருக்கு தலையில் ஒரு பக்கம் மட்டும் திடீர் என மரத்து போகும். 
7. இது பக்கவாதம் ஏற்பட போவதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம்.